ஒலுவில் பிரதேசத்தில் இராணுவத்தினர்
வசமிருந்த காணி விடுவிப்பு
பத்திரங்கள்
ஆளுநரிடம் இன்று கையளிப்பு
அட்டாளைச்சேனை
ஒலுவில் பிரதேசத்தில் பள்ளக்காட்டிலுள்ள முஸ்லீம்களுடைய 38 ஏக்கர் காணிகளை
30 வருடமாக இராணுவம் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்தது. அந்தக் காணி விடுவிப்புச் செய்யப்பட்ட
பத்திரங்கள் ஆளுநரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையிலுள்ள
மாவட்ட செயலகத்திற்கு
கிழக்கு மாகாண
ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ்
இன்று காலை
விஜயம் செய்தார்.
இதன்போது,
அம்பாறை மாவட்ட
அரசாங்க அதிபர்
டி.எம்.எல்.பண்டாரநாயக்க
ஆளுநரை வரவேற்றதுடன்
தொடர்ந்து கச்சேரியின்
எ.ஜ.விக்ரம அரங்கில்
சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
அங்கு
இராணுவத்தினரின் வசமிருந்த காணி விடுவிப்புச் செய்யப்பட்ட
பத்திரங்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன்
அவை அரசாங்க
அதிபரிடம் ஆளுநரால்
வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து
ஆளுநரினால் உரையாற்றப்பட்டதுடன் அதன்பின்பு
ஊடகவியலாளர்களின் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில்
அரச அதிபர்
பண்டாரநாயக்க, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்
ஆளுநரின் செயலாளர்
அசங்க அபேவர்த்தன
உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment