கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியை
தேசியக் கல்லூரியாக தரமுயர்த்த
 எண்ணமுள்ள அரசியல்வாதிகள்
கல்முனையில் இல்லையா?
பெற்றோர்கள் கேள்வி


கிழக்கு மாகாணத்தில் பல சாதனைகள் புரிந்த கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியை தேசியக் கல்லூரியாக தரமுயர்த்த கல்முனையில் சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் இல்லையா என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி இந்நாட்டில் உள்ள பல பிரதேசங்களைச் சேர்ந்த மாணவிகளை பல்கலைக்கழகம் அனுப்பி டாக்டர்களையும் பொறியியலாளர்களையும் சட்டத்தரணிகளையும் ஆசிரியைகளையும் உருவாக்கி சாதனை படைத்து வருகின்றது.
இப்படியாக இப்பிரதேச மாணவிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியை தேசியக் கல்லூரியாக தரமுயர்த்த துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக இல்லை என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 4 பாடசாலைகளை தேசியக் கல்லூரிகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top