தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில்
இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்
2019ம் ஆண்டில் தரம் ஒன்றில்
மாணவர்களை பாடசாலைகளில்
இணைத்துக் கொள்ளும்
தேசிய வைபவம்
கனேகொட ஆரம்ப
வித்தியாலயத்தில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பாக
அமைச்சின் மேலதிக
செயலாளர் ஆ.எம்.எம்.
ரத்னாயக்க தெரிவிக்கையில்
;.கல்வி அமைச்சர்
அகில விராஜ்
காரியவசம் இந்த
வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள
உள்ளார். இந்த
தேசிய வைபவத்திற்க
இணைவாக நாட்டின்
ஏனைய பாடசாலைகளில்
மாணவர்களை இணைத்துக்
கொள்ளும் வைபவங்கள்
இடம்பெறவுள்ளன என்று கூறினார்..
தற்பொழுது
பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்கான
பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாக
அமைச்சின் மேலதிக
செயலாளர் ஆ.எம்.எம்.
ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தரம்
ஒன்றில் மாணவர்களை
சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்வியமைச்சு அங்கீகரித்துள்ள
வசதி கட்டணம்,
பாடசாலை அபிவிருத்தி
கட்டணம் தவிர்ந்த
ஏனைய அறவீடுகள்
எதனையும் பெற்றோர்களிடம்
அறவிடக் கூடாது
என்று அனைத்து
பாடசாலை அதிபர்களுக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான
சம்பவங்கள் பதிவானால் சம்பந்தப்பட்ட அதிபருக்கு எதிராக
உடனடி நடவடிக்கை
மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தயாராகி வருகிறது. தேசிய
பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட
மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் தற்பொழுது
பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை
பாடசாலை கிடைக்காத
பெற்றோர் இருப்பார்களாயின்
வலய பணிப்பாளரை
சந்திக்குமாறும் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment