இலங்கையில்
இந்த வருடத்தில்
இலத்திரனியல் கடவுச்சீட்டை
விநியோகிப்பதற்கு திட்டம்
இந்த வருடத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை தரமிக்கதாக மேம்படுத்தி இலத்திரனியல் கடவுச்சீட்டாக விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்
இந்த கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக தற்போது கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. இந்த
வருடத்தின் நடுப்பகுதியில் இந்த
இலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம்
முதலாம் திகதியில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டு கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாக திரு.ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை மத்திய கிழக்கு நாடுகளுக்காக மாத்திரம் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தம்பதீப யாத்திரைக்கும் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு மாத்திரம் விநியோகிக்கும் கடவுச்சீட்டு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது
0 comments:
Post a Comment