கல்முனை மாநகரசபையின் வரவு செலவு திட்டம்
இரண்டாம் தடவையும் தோல்வி!
கல்முனை
மாநகரசபை கல்முனை மாநகரசபையின் 2019ஆம் ஆண்டுக்கான
வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது தடவையும்
தோல்வியடைந்துள்ளது.
கல்முனை
மாநகரசபை நேற்று
மாலை இடம்பெற்ற
அமர்வின் போது
வரவு செலவுத்
திட்டம் வாக்கெடுப்பிற்காக
முன்வைக்கப்பட்டது.
இதன்
போது ஆதரவாக
16 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்,
சாய்ந்தமருது சுயேச்சை அணியினர், குதிரை மற்றும்
கொடி உறுப்பினர்கள்,
தமிழர் விடுதலைக்
கூட்டணி சேனைக்குடியிருப்பு
உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 25 பேர்
எதிராக வாக்களித்துள்ளனர்.
கடந்த
26ஆம் திகதியும்
வரவு செலவுத்திட்டம்
வாக்கெடுப்பிற்காக சபை அமர்வில்
முன்வைக்கப்பட்ட போதும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும்
பதிவாகி தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை
மாநகரசபையில் 41 உறுப்பினர்களிருப்பதும், ஆளுந்தரப்பு
ஜக்கிய தேசிய
கட்சியில் இணைந்த
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்களும் உள்ளனர்.
0 comments:
Post a Comment