‘ஏ.ஆர். மன்சூர்
வாழ்வும் பணிகளும்’
மிகச் சிறப்பாக
இடம்பெற்ற
நூல் வெளியீட்டு
நிகழ்வு
கல்முனை
மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.
பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர்
வாழ்வும் பணிகளும்’
நூல் வெளியீட்டு
நிகழ்வு நேற்று 2019.01.12 ஆம் திகதி சனிக்கிழமை
கல்முனை உவெஸ்லி
உயர்தரப் பாடசாலை
நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது,
முன்னாள்
அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பாரியார் ஹாஜியானி ஸொஹறா மன்சூர் அவர்களை
முன்னிலைப்படுத்தி கல்முனை மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின்
புதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் பிரதம
அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில்,
பேராதனை பல்கலைக்கழக
தொழில்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான் நூல் ஆய்வுரை செய்து உரைநிகழ்த்துகையில் மர்ஹும் மன்சூர் அவர்களின் அரசியல் செயல்பாடுகள்
குறித்தும் அன்னார் அமைச்சராக பதவி வகித்தபோது அன்னார் தனக்கு தனிப்பட்ட செயலாளராக
வைக்கப்பட்டிருந்தவர்கள் சாதாண பழைய துவிச்சக்கர வண்டியில் சென்று கடமையாற்றியதையும்
தற்போதய அமைச்சர்களின் அந்நியொன்னியங்கள் எவ்வாறு சொகுசு கார்களில் பயணிக்கிறார்கள்
என்பதையும் உதாரணம் காட்டிப் பேசியதுடன் தற்போதய அரசியல் முறைமைகளையும் அரசியல்வாதிகளின்
நிலைகளையும் எடுத்துக்கூறி இவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே to late எனத் தைரியமாக சபையில் முன்வைத்து பேசினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர்
பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நூல் அறிமுகவுரை
செய்து உரை நிகழ்த்துகையில், மர்ஹும் ஏ.ஆர்.
மன்சூர் அவர்களின் இலட்சியம் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்
எதிர்கால வளர்ச்சியும்
மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரதப்பாதை
விஸ்த்தரிப்பும் என்பதை எடுத்துக்கூறி அன்னாரின் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும்
முன் வைத்தார்.
இராஜாங்க
அமைச்சர் எச்.எம்.எம்.
ஹரீஸ் உரை நிகழ்த்துகையில், இலஞ்சம் - ஊழல்,
மது - மாது
அற்ற அரசியலில்
ஒழுக்கத்தை எங்களுக்கு கற்றுத் தந்த பெருந்தகை
ஏ.ஆர்.
மன்சூர், அவரின்
உயரிய ஒழுக்கப்
பண்பை நாம்
அரசியலில் இன்றுவரை
பின்பற்றி வருகின்றோம்.
அன்னார் எனக்கு தந்த ஆசிர்வாதம் அரசியலில் தொடர்ந்து வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது.
எனது தந்தையை மாவடிப்பள்ளியில் உள்ள இடத்திற்கு
தேடி வந்து பள்ளிவாசல் பொறுப்பை கையேற்கும்படி கூறி அதனை அவரிடம் ஓப்படைத்து பள்ளிவாசல்
சொத்துக்களைப் பாதுகாத்தவர் என்றார்.
இந்நிகழ்வில்
குஞ்சித்தம்பி ஏகாம்பரம், டாக்டர் எஸ். நளீம்டீன், சட்டத்தரணி மர்யம் நளீம்டீன், நூலாசிரியர்
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் பேத்தி சைனப் நளீம்டீன் ஆகியோர்
உரை நிகழ்த்தினார்கள்.
பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்,
கல்முனை மாநகர
சபை மேயர்
ரக்கீப் அபூபக்கர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள்
பலர் கலந்து
கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ‘ஏ.ஆர்.
மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இப்புத்தகத்தின் விலை
1250 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment