மேற்கத்திய கலச்சாரத்தை பரப்புவதற்காகவே
மலாலா நோபல் பரிசைப் பெற்றுள்ளார்
தலிபான்கள் குற்றச்சாட்டு
மலாலா
மேற்கத்திய கலச்சாரத்திற்காக நோபல் பரிசை பெற்றுள்ளார்.எனக்கூறி தலிபான்கள்
கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளனர்.
தலீபான்
போராளிகளின் மிரட்டலுக்கு மத்தியிலும், பெண் கல்விக்காக
குரல் கொடுத்து
வரும் பாகிஸ்தானின்
மலாலா யூசுப்
சாய்க்கு (17) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும்
என நார்வே
தலைநகர் ஆஸ்லோவில்
செயல்பட்டு வரும் அமைதிக்கான நோபல் பரிசு
குழு அறிவித்து
இருந்தது கடந்த
வாரம் புதன்
கிழமை இவருக்கு
நோபல் பரிசும்
வழங்கபட்டது.
இந்த
விழாவின் தொடக்கத்தில்,
அமைதிக்கான நோபல் பரிசுக்குழு தலைவர் ஜார்ப்
ஜார்ன் ஜாக்லேண்ட்,
விருதுக்கு உரியவர்களை அறிமுகம் செய்து வைத்து
பேசினார்.
2014-ம்
ஆண்டிற்கான குழந்தைகள் உரிமைக்காக அயராது போராடி வருகிற இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும்
(வயது 60), மலாலா யூசுப்
சாய்க்கும் 18 காரட் பச்சை தங்க முலாம்
பூசிய, 24 காரட்
தங்கத்தாலான பதக்கம் (எடை சுமார் 175 கிராம்),
பாராட்டு சான்றிதழ் என்பன வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில்
பெண்களின் கல்விக்காக
குரல் கொடுத்து
வந்த குழந்தைப்
போராளி மலாலா
யூசுப்சாய், கடந்த 2012ம் ஆண்டு தலிபான்
போராளிகளால் சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த
அவர், லண்டனில்
தீவிர சிகிச்சைக்குப்
பிறகு உயிர்பிழைத்தார்.
மலாலா
தற்போது லண்டனில்
வசித்து குடும்பத்துடன்
வசித்து வருகிறார்.
மலாலா
மீதான தாக்குதலில்
தொடர்புடையவர்களை பாகிஸ்தான் இராணுவம் தெஹ்ரீக்-இ-தலிபான்
அமைப்பைச் சேர்ந்த
10 பேர் கைது
செய்துள்ளது குறிப்பிடதக்கது.
தலிபான்
இயக்கத்தின் தற்போதைய தலைவர் மவுலானா பஜ்லுல்லாவின்
உத்தரவுப்படி மலாலாவை கொலை செய்ய இந்த
குழுவினர் திட்டமிட்டதாகவும்
பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது நினைவு கூற
தக்கது.
இந்நிலையில்
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச்
சேர்ந்த செய்தி
தொடர்பாளர் கூறுகையில் மலாலா மேற்கத்திய கலச்சாரத்திற்காக
நோபல் பரிசை
பெற்றுள்ளார்.இதற்கு தலிபான்கள் கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளனர்.
இருப்பினும்
அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுகொண்ட மலாலா
எனது கல்விக்கான
போராட்டம் தொடரும்
என்று கூறி
உள்ளது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment