முஸ்லிம்காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்
வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தி
எம். ஐ. ஸாஹிர்
எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவின்
வாக்குகளை தீர்மானிக்கும்
சக்தியாக மாறியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ்,
பொது வேட்பாளரை
ஆதரிக்க வேண்டும்
என்ற மக்களின்
நியாயமான கோரிக்கை,
உணர்ச்சிகளுக்கு அகப்படாமல் சிறுபான்மையினரின்
நோக்கத்தை அடையக்கூடிய
வண்ணம் அமைய
வேண்டும். அதேநேரம்
மக்களின் எதிர்பார்ப்பும்
முஸ்லிம் காங்கிரஸினால்
கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இன்று
BBS போன்ற இனவாதிகள்
மௌனம் காப்பது
முஸ்லிம் காங்கிரஸ்
அரசாங்கத்துடன் இருப்பதனாலாகும். முஸ்லிம் காங்கிரஸ், பொது
வேட்பாளரை ஆதரிக்கும்
முடிவை அவசரமாக
அறிவிக்குமாயின், இனவாதிகளின் மௌனம் கலைக்கப்பட்டு, அது
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவுகே வாய்ப்பாக அமையும். இதன் போது
சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல்
போகலாம். இதற்கு
கடந்த ஜனாதிபதி
தேர்தல் முடிவுகள்
சிறந்த படிப்பினையாகும்.
தமிழ் தேசிய
கூட்டமைப்பின் தற்போதய ஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடும்
இதனையே காட்டுகின்றது.
சிறுபான்மையினர்
யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்பதை
ஏலவே தீர்மானித்து
விட்டனர். அதே
நேரம் எதிர்
அணியினரும் சிங்கள சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை
இன்னும் பெறாத
நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளரை
ஆதரிக்கும் முடிவை அவசரமாக அறிவிப்பது ஆரோக்கியமனதாக
அமையாது. ஏன்
எனில் இன்றைய
அரசாங்கம், சிறுபான்மை தலைமைகள் அரசாங்கத்துடன் இருந்த
போதிலும் சிறுபான்மையினரின்
வாக்குகளை நம்பி
இருக்கவில்லை. அவர்களின் திட்டம் பெரும்பான்மை சமூகத்தின்
வாக்குகளை பெற்றுக்கொள்வதாகும்.
சிலநேரம் சிறுபான்மை
தலைமைகள் அரசாங்கத்துடன்
இருப்பது அவர்களின்
இனவாத பிரசாரத்துக்கு
தடையாகவும் அமையலாம்.
முஸ்லிம்
காங்கிரஸ் பொது
வேட்பாளரை ஆதரிக்கும்
முடிவு தனிபட்ட
ரீதியில் பலருக்கு
சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அல்லது பெரும்பான்மை சமூகத்தின்
மத்தியில் முஸ்லிம்
காங்கிரஸ் பற்றி
பிழையான அபிப்பிராயத்
தை தோற்றிவிட்டாலும்
சமூக பார்வையில்
நிச்சயமாக அது
பல நன்மைகளை
எதிர்காலத்தில் கொண்டு வரும்.
இது
பற்றிய மாற்றுக்கருத்துகளை
நாகரிகமான முறையில்
யாரும் பகிர்ந்து
கொள்ளலாம்.
13.12.2014
0 comments:
Post a Comment