ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
எந்த வேட்பாளரை ஆதரவளிப்பது?

Athambawa Mohamed Barakathullah

அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் முக்கியமானது அரசாங்கம் தனது பிடிவாத போக்கிலிருந்து இறங்கி வந்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்கின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளரை ஆதரவளிபது? இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
இன்று 2014.12.14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி கெட்டம்பே ஓக்ரே மண்டபத்தில் நடைபெற்றுவரும், நாடளாவியரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டத்தில் உரையாற்றும்போதே தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தலைவர் ஹக்கீம் இக்கூட்டத்தில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் தனது பிடிவாத போக்கிலிருந்து இறங்கி வந்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்கின்ற நிலையில், நிபந்தனையின்றி, சுயமரியாதை இழந்து ஆதரவு வழங்கலாமா என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் எழுகின்றது. எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் ஊடாக முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டி எழுப்பலாம் என்று அரசாங்கம் கருதுகின்றது.இதற்கு மத்தியில் களநிலவரம் எமது மக்களின் மன உணர்வுகள் என்பவற்றையும், நாம் மதித்து அவற்றை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.
அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம் முக்கியமானது. அதனையாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் முடிவை முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, ஏனைய அரசியல் கட்சிகளும், நாட்டு மக்களும் எதிர்பாத்துக்கொண்டிருப்பதாகவும் இங்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top