தபால் மூல
வாக்களிப்பு
டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும்
-
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
தபால் மூல விண்ணப்பங்கள் 50000 நிராகரிப்பு
ஜனாதிபதி
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர்
23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்
ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதேபோல ஏனைய
வாக்காளர் பட்டியல்கள்
அந்தந்த கிராம
சேவகர் அலுவலகங்கள்,
பிரதேச செயலகங்கள்,
மாவட்டச் செயலகங்கள்
என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலின்
தபால்மூல வாக்களிப்புக்காக
விண்ணப்பபிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில், 50,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக
தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால்மூல
வாக்களிப்புக்காக 5,47,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக
மேலதிக தேர்தல்கள்
ஆணையாளர் எம்.எம்.முஹம்மட்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment