இறுதி தீர்மானம் எடுக்க முடியாமல் திண்டாடும்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்
இறுதியில் மஹிந்தவுக்கே
ஆதரவு?
ஜனாதிபதித்
தேர்தலில் எந்த
வேட்பாளரை ஆதரிப்பது
என்பது குறித்த
இறுதி தீர்மானம்
எடுக்கும் பொருட்டு
நேற்று கூடிய
முஸ்லிம் காங்கிரஸின்
உயர்மட்ட கூட்டம்
எந்தவித முடிவும்
இன்றி முடிந்துள்ளது.
குறித்த
கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பலத்த கருத்து வேறுபாடு
தோன்றியதனையடுத்து எதுவித முடிவுமின்றி
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து
கோரிக்கைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு
உடனடியாக நடவடிக்கைகளை
மேற்கொள்வதாக அரசு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
“கிழக்கு
மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி
மற்றும் வழிபாட்டுத்
தளங்கள் உள்ளிட்ட
பல்வேறு பிரச்சினைகள்
தொடர்பாக அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
தலைமையிலான அக்கட்சியின் குழுவினருக்கும்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ,
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர்
அடங்கிய அரச
குழுவினருக்கும் இடையில் திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு
அமைச்சில் இடம்பெற்ற
முக்கிய பேச்சுவார்த்தையொன்றின்போது,
அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு
உடனடியாக நடவடிக்கைகளை
மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால்
மஹிந்த ராஜபக்ஸவிற்கு
முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவு வழங்கலாமென
எதிர்பார்க்கப்படுகின்றது?
இதேவேளை
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தை
மீண்டும் எதிர்வரும்
12ம் திகதி
அல்லது அதற்கு
பின்னர் கூட்டுவதென்று
தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment