அமைச்சர் றிஷாத் பதியுதீனின் துரித முயற்சியால்
பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில் (படங்கள் இணைப்பு)
ஏ.எச்.எம்.பூமுதீன்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசியத்
தலைவரும் அமைச்சருமான
றிஷாத் பதியுதீனின்
துரித முயற்சியினால்
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு
கல்வி பயிலும்
பட்டதாரி மாணவர்களுக்கு
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது.
மருதானை
வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில்
இடம்பெற்ற இந்நிகழ்வில்
முதற்கட்டமாக வன்னி மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 230 பட்டதாரிகளுக்கு
குறித்த புலமைப்பரிசில்
வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்
றிஷாத் பதியுதீன்
பிரதம அதிதியாக
கலந்து கொண்டு
இப் புலமைப்
பரிசில்களை வழங்கி வைத்தார்.
அமைச்சர்
றிஷாத்
பதியுதீன் எடுத்துக் கொண்ட துரித முயற்சியின்
காரணமாக இப்
புலமைப்பரிசில் நிதியத்திற்கென ஆரம்ப வைப்பாக ரூபா
50 இலட்சம் வைப்பில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்
அடுத்த கட்டமாக
தேசிய ரீதியாக
இவ்வாறான புலமைப்பரிசில்
திட்டத்தை விஸ்தரிக்கவும்
தான் நடவடிக்கை
எடுத்து வருவதாகவும்
அமைச்சர் இங்கு
உரையாற்றுகின்றபோது சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்வில்
அமைச்சரின் உரை மிக உருக்கமானதாகவும், கல்வியின் முக்கியத்துவத்தையும்
கல்வியால் தாம்
அடையப்பெறும் உயர்பதவிகளின் மூலம் ஏனையோருக்கு உதவி
புரியும் மனப்பக்குவத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக
அமைந்திருந்தது.
--
0 comments:
Post a Comment