மற்றொரு பூமி?
செவ்வாய்
கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியுமா
அல்லது அங்கு
ஏற்கெனவே உயிர்கள்
இருந்தனவா? இதுவரை பில்லியன் டாலர்கள் செலவு
செய்து ஆராய்ச்சி
மேற்கொள்ளப்பட்டாலும் திட்டவட்டமாக விடை
தெரியாத மில்லியன்
டாலர் கேள்வி
இது. சூரிய
மண்டலத்தில் பூமியைப்போல வேற்று கிரகத்தில் உயிர்கள்
இருந்திருந்தால், அது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும்
என விஞ்ஞானிகள்
முதல் சாதாரண
பொதுமக்கள் வரை நம்புகின்றனர். செவ்வாயிலிருந்து வரும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள்
(வேற்றுக் கிரகவாசிகள்)
என அந்த
நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் ஏராளமான (கட்டு)கதைகளும் உண்டு.
ஆனால், உண்மை
நிலை என்ன?
உயிர்கள்
வாழ தண்ணீர்
அவசியம். செவ்வாயில்
தண்ணீர் இருக்கிறது
என்பதாலேயே அங்கு உயிர்கள் இருந்திருக்க முடியுமா?
செவ்வாயில்
தண்ணீர் என்பது
தரைப்பரப்புக்கு அடியில் பனிக்கட்டி வடிவில் இருப்பதாக
இதுவரை மேற்கொள்ளப்பட்ட
ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க
விண்வெளி ஆய்வு
நிறுவனமான "நாசா', செவ்வாய் கிரகத்தில் ஆய்வு
செய்வதற்காக அனுப்பியுள்ள கியூரியாசிட்டி
உலவி இயந்திரம்
சமீபத்தில் அனுப்பியுள்ள புகைப்படங்கள்,
அங்கு தரைப்பரப்பிலும்
தண்ணீர் இருந்ததற்கான
தடயங்களைக் காண்பிக்கிறது.
செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது ஆய்வு செய்து
வரும் கியூரியாசிட்டி
உலவி இயந்திரம்
அனுப்பிய புகைப்படங்களை
நாசா கடந்த
7ஆம் திகதி
வெளியிட்டது. அதில், 96 மைல் பரந்து விரிந்த
பள்ளத்தாக்கின் மையப் பகுதியில், தரைப்பரப்பில் இருந்து
3 மைல் உயரத்துக்கு
மலைபோன்று காணப்பட்ட
வடிவமே அங்கு
தண்ணீர் இருந்ததற்கான
ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளது.
"மவுன்ட் ஷார்ப்' என இந்த மலைப்
பகுதிக்கு நாசா
பெயரிட்டிருக்கிறது. அந்த கேல்
பள்ளத்தாக்கே ஒரு பெரிய ஏரியாக இருந்திருக்கலாம்
என்றும், அது
வற்றி, நிரம்பி
என மீண்டும்
மீண்டும் இந்தச்
செயல்பாடுகள் பல லட்சம் ஆண்டுகளாக நடந்திருக்க
வேண்டும் என்றும்,
அந்த ஏரிப்படுகை
உருவாக்கிய மலைதான் தற்போது கண்டறியப்பட்டுள்ள "மவுன்ட் ஷார்ப்' என்றும் விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். பூமியில் உள்ளதைப்போன்ற ஏரிப்படுகைபோலக் காட்சி
அளிக்கும் அந்தப்
பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இந்த மலை
உருவானது ஏன்
என்ற கேள்விக்கு
விடை அறிய
இன்னும் ஆராய்ச்சிகள்
தேவைப்படுகின்றன.
"தரைப்பரப்பில் இருந்து மூன்று மைல்
உயரத்துக்குக் காணப்படும் அந்த மலையின் அடுக்குகள்
பல்வேறு படிமங்களால்
உருவாகியுள்ளது. சில அடுக்குகள் அநேகமாக ஓர்
ஏரிப்படுகை மூலம் உருவாகியிருக்கலாம்; சில அடுக்குகள்
ஆறு அல்லது
காற்றின் விளைவாக
உருவாகியிருக்க அதிக வாய்ப்புள்ளது' என கியூரியாசிட்டி
திட்ட விஞ்ஞானி
ஜான் குரோட்சிங்கர்
தெரிவித்துள்ளார்.
செவ்வாயின்
தரைப்பரப்பிலும் தண்ணீர் இருந்தது என்ற ஆய்வு
முடிவைத் தொடர்ந்து,
அங்கு உயிர்களும்
ஒரு காலத்தில்
இருந்திருக்கலாம் அல்லது உயிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு
இருந்திருக்கலாம் எனவும், தண்ணீர் இருந்ததால் மட்டுமே
அங்கு உயிர்கள்
இருந்திருக்கலாம் எனச் சொல்ல முடியாது என்றும்
விஞ்ஞானிகள் மத்தியிலேயே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன.
தற்போதைய
மவுன்ட் ஷார்ப்
கண்டுபிடிப்பு மூலம், செவ்வாயின் தரைப்பரப்பில் தண்ணீர்
இருந்திருக்கலாம் என்றுதான் விஞ்ஞானிகள் கருதுகிறார்களே தவிர,
தண்ணீர் இருந்தது
என்ற உறுதியான
முடிவுக்கு அவர்கள் வரவில்லை. பல லட்சம்
ஆண்டுகளாகத் தண்ணீர் தேங்கிய ஏரி மூலம்,
இந்த மவுன்ட்
ஷார்ப் உருவானது
என்றால், அந்தத்
தண்ணீர் இப்போது
எங்கே போனது?
தரைப் பரப்பையும்,
பாறை வடிவங்களையும்,
மலைப் பகுதியையும்
பூமியைப்போலவே கொண்டுள்ள செவ்வாய் ஒரு காலத்தில்
இன்னொரு பூமியாக
இருந்திருக்குமா என, ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னர், ஏராளமான கேள்விகளையும் மிச்சம்
வைக்கிறது, உலர்ந்த அந்த வெ(வே)ற்றுக் கிரகம்!
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம்
திகதி செவ்வாய்
கிரகத்தில் தரையிறங்கிய கியூரியாசிட்டி
உலவி இயந்திரம்,
இரு வாரங்கள்
தனது கருவிகளைச்
சோதனை செய்து
கொண்ட பிறகு,
ஆகஸ்ட் 22ஆம்
திகதி தனது
பயணத்தைத் தொடங்கியது.
செவ்வாயில்
அதன் முதல்
புவியாண்டின் பெரும்பாலான நேரம், அது தரையிறங்கிய
சுற்றுப் பகுதியிலேயே
ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதன் பின்னர், அது
இறங்கிய இடத்திலிருந்து
6 மைல் தொலைவு
பயணம் செய்து,
தற்போதைய கேல்
பள்ளத்தாக்குப் பகுதியை அடைந்துள்ளது.
செவ்வாயிலிருந்து
மாதிரிகளை பூமிக்கு
எடுத்து வந்து
சோதனை செய்யும்
திட்டத்தை 2020இல் நாசா மேற்கொள்ள இருக்கிறது.
தற்போது
சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பல மில்லியன்
ஆண்டுகளாக அந்த
ஏரி செவ்வாயில்
இருந்திருக்கலாம்; அங்கு உயிர்கள்
தோன்றுவதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்தியிருக்கலாம். - செவ்வாய் கிரக
ஆய்வுத் திட்ட விஞ்ஞானி
மைக்கேல் மெயர்
செவ்வாய்
கிரகத்தில் வாழ்க்கைச் சூழல் என்பது, தண்ணீர்
தவிர, வெப்பநிலை,
கதிர்வீச்சு இவற்றையும் சார்ந்து இருக்கிறது. அயனியாக்க
கதிர்வீச்சில் இருந்து உயிர்களைப் பாதுகாக்கும் காந்தப்புலம்,
சூரியனின் புற
ஊதா கதிர்களில்
இருந்து பாதுகாக்கும்
கடினமான சூழல்,
திரவ நீர்
இந்த மூன்றும்
உயிர்கள் வாழ்வதற்கு
அவசியம். இந்த
மூன்று பண்புகளும்
தற்போதைய செவ்வாயில்
இல்லை. இவை
மூன்றும் ஒரே
நேரத்தில் இருந்ததா
என்பதை உறுதிப்படுத்துவது
அவசியம்
- நாசா விஞ்ஞானி பமேலா
கன்ராட்
0 comments:
Post a Comment