மேலும் பாரிய வீழ்ச்சியில் இலங்கை ரூபா
184  ரூபாவை தாண்டியது டொலரின் பெறுமதி



இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான பெறுமதியை இலங்கை ரூபாய் இன்று எட்டியுள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய டொலர் ஒன்றின் விலை 184 ரூபாவைக் கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய இன்று184.0758 ரூபாயை எட்டியுள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை180.1015 ரூபாயை எட்டியுள்ளது.

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையிலும், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0758 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றைய தினம் (27) ரூபா 183.5548 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.12.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.


நாணயம்
கொள்வனவுவிலை (ரூபா)
விற்பனைவிலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
125.6926
131.0891
கனடா டொலர்
131.3907
136.2824
சீன யுவான்
25.9441
27.1848
யூரோ
204.9981        
212.2402
ஜப்பான் யென்
1.6174
1.6768
சிங்கப்பூர் டொலர்
130.9095
135.3794
ஸ்ரேலிங் பவுண்
226.9854
234.4025
சுவிஸ் பிராங்க்
181.5559
188.3666
அமெரிக்க டொலர்
180.1015
184.0758



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top