மஹிந்தவை தரக்குறைவாக
திட்டிய சரத் பொன்சேகா
மஹிந்த
ராஜபக்ஸ மற்றும்
அவரது குடும்ப
உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்
சரத் பொன்சேகா
வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார்.
காலி
முகத் திடலில்
இன்றைய தினம்
நடைபெற்ற மாபெரும்
கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர்
தொடர்ந்தும் கூறுகையில்,
மஹிந்த
ராஜபக்ஸ கூறுகின்றான்
மக்களுக்காக தேர்தல் தேவை என்று, அடேய்
முட்டாள், அடேய்
பேயே, நீ
நினைக்கும் போது தேர்தலை நடத்த முடியாது.
உனக்குத்
தேவையான நேரத்தில்
தேர்தலை நடத்த
முடியாது.
கோதபாய
ராஜபக்ஸ நகர
அபிவிருத்தி என்ற பெயரில் பாரியளவில் ஊழல்
மோசடிகளில் ஈடுபட்டார்.
கொழும்பில்
குப்பைகளை அகற்றுவதாகக்
கூறி மிகவும்
பாரியளவில் ஊழல் செய்துள்ளார்.
மத்திய
வங்கி பிணை
முறி மோசடிகள்
தொடர்பில் இன்று
சிலர் மிகுந்த
வேதனை அடைகின்றார்கள்,
ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை நடத்துகின்றார்கள்.
எனினும்,
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களில்
ராஜபக்ஸக்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர்.
ஹெட்ஜின்
கொடுக்கல் வாங்கல்,
கிரேக்க பிணை
முறி உள்ளிட்ட
பல்வேறு கொடுக்கல்
வாங்கல்களில் ராஜபக்ஸக்கள் பாரியளவில் ஊழல் மோசடிகள்
ஈடுபட்டனர்.
அவன்ட்
கார்ட் கொடுக்கல்
வாங்கல்களின் மூலம் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது,
இந்த அனைத்து
ஊழல் மோசடிகள்
பற்றியும் இவர்கள்
வாய் திறப்பதில்லை.
மத்திய
வங்கி பிணை
முறி மோசடி
பற்றி மட்டுமே
பிதற்றுகின்றார்கள்.
நான்
இன்று ஜனாதிபதியை
விமர்சனம் செய்ய
மாட்டேன் எனினும்
ஒன்றை மட்டுமே
சொல்ல வேண்டும்.
நாடாளுமன்ற
சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ரணிலை
மீளவும் பிரதமராக
நியமித்தேன் என மைத்திரிபால சிறிசேன கூறினார்.
எனினும் அது
முற்று முழுதான
ஓர் பொய்யாகும்.
நாடாளுமன்ற
சம்பிரதாயங்கள், நாடாளுமன்ற மரபுகள் போன்றவற்றுக்கு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மதிப்பளிக்கவில்லை என சரத்
பொன்சேகா குற்றம்
சுமத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.