ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன்
இருப்பதற்கான சான்றிதழ்
இதற்கான விண்ணப்ப பத்திரங்களை
பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்
ஓய்வூதியம்
பெறுவோர் உயிருடன்
இருப்பதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளும்
பணி தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய கொடுப்பனவு
பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியகாரர்கள்
தமது பிரதேச
செயலகங்களில் இதற்கான விண்ணப்ப பத்திரங்களை பெற்றுக்கொள்ள
முடியும். ஓய்வூதிய
திணைக்களத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ள
முடியும் என்றும்
பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதிக்கு
முன்னர் இந்த
உறுதிப்பத்திரத்தை ஓய்வூதிய கொடுப்பனவு
திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை
சமர்ப்பிக்க தவறும் ஓய்வூதியகாரர்களுக்கான
ஓய்வூதிய கொடுப்பனவு
இடைநிறுத்தக் கூடும் எனவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
டிசம்பர்
மாதம் முதலாம்
திகதி முதல்
20ம் திகதி
வரையில் ஓய்வூதியகாரர்களுக்கான
கொடுப்பனவு நேற்று வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை
கையடக்க குறுந்தகவலின்
மூலம் ஓய்வூதியம்
பெறுவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில்
அரச சேவையில்
மொத்த ஓய்வூதியம்
பெறுவோரின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 20 ஆயிரமாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.