பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த பூகம்பம்:
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
பிலிப்பைன்ஸ்
நாட்டின் தெற்குப்பகுதியில்
இன்று காலை
6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டது. சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து அமெரிக்க
நிலவியல் அமைப்பு
வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்தாவது:
பிலிப்பைன்ஸ்
நாட்டின் தெற்குப்பகுதியில்
உள்ள மின்டானோ
தீவில், டாவோ
நகரை மையம்
கொண்டு இன்று
காலை சக்தி
வாய்ந்த பூகம்பம்
ஏற்பட்டது. நிலத்தடியில் 59 கி.மீ ஆழத்தில்
இந்தப் பூகம்பம்
நிலைகொண்டு இருந்து. ரிக்டர் அளவில் இந்த
நிலநடுக்கம் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்தப்
பூகம்பத்தால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி
அலைகள் எந்நேரமும்
உருவாகலாம் எச்சரிக்கையாக இருக்கவும் “
என அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பூகம்பத்தால், ஏற்பட்ட
சேதங்கள், உயிரிழப்புகள்
குறித்து இன்னும்
தகவல் வெளியாகவில்லை.
பசிபிக்
சுனாமி எச்சரிக்கை
மையம் வெளியிட்டுள்ள
எச்சரிக்கை அறிவிப்பில், “ பிலிப்பைன்ஸில்
உள்ள ஜெனரல்
சான்டோஸ் நகரை
மையம் கொண்டு
பூமிக்குக் கீழே 60 கி.மீ ஆழத்தில்
நிலநடுக்கம் ஏற்பட்டது.
மிகசக்தி
வாய்ந்த சுனாமி
அலைகள், இந்தோனேசியா
கடற்கரையையும், பிலிப்பைன்ஸ் கடற்பகுதியையும்
தாக்க வாய்ப்புள்ளது
எச்சரிக்கையாக இருக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment