அந்த 51 நாள் புத்தகம் வெளிவந்தால்
எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர்
சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு



அண்மையில் நடந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அந்த 51 நாள் என்னும் புத்தகத்தை இப்பொழுது எழுதினால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்  நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அண்மைய அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,

நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது அப்புத்தகத்தை எழுதினால், எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும்.

கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொதுமக்களின் அபிலாசைகளை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் தயாரில்லை. தற்போது மீண்டும் வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை பாரியளவில் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top