தென்னிலங்கையின்
தங்காலை
குடாவெல்ல பகுதியில்
குடாவெல்ல பகுதியில்
சற்று முன்னர் நடந்த பயங்கரம்!
பலர் கொடூரமாக சுட்டுக் கொலை
தென்னிலங்கையின்
தங்காலை குடாவெல்ல
துறைமுகத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டுச்
சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
இன்று
அதிகாலை இடம்பெற்ற
துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்களில் பலர்
கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இன்று
அதிகாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார்
சைக்கிளில் வந்த சந்தேக நபர் இருவரினால்
இந்த துப்பாக்கி
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு
T56 ரக துப்பாக்கி
மற்றும் ரவைகள்
பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தனிப்பட்ட
பிரச்சினைக்கமைய இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்
என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
மீனவர்களுக்கு
இடையில் ஏற்பட்ட
பிரச்சினையே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என
பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இச்
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் இருவர்
உள்ளிட்ட ஏனைய
சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.
குறித்த
சம்பவம் தொடர்பில்
பொலிஸ் மா
அதிபர் பூஜித்
ஜயசுந்தரவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தென் மாகாணத்திற்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா
அதிபர் மற்றும்
மாத்தறை, தங்காலை
பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்
ஆகியோரின் நேரடி
கண்காணிப்பின் கீழ் இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மரணமடைந்தவர்களின்
சடலங்கள் தொடர்பான
பிரேத பரிசோதனைகள்
மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.