சட்டம், ஒழுங்கு, ஊடகத்துறை அமைச்சுக்களால் இழுபறி
அடம்பிடிக்கிறாராம் மைத்திரி



புதிய அமைச்சரவை இன்று  பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

எனினும், சட்டம், ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக்கொடுக்க அவர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், 30 அமைச்சர்களே அங்கம் வகிக்க முடியும் என்பதால், ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த 28 பேரே புதிதாக நியமிக்கப்பட முடியும்.

இந்தநிலையில், அமைச்சர்களாக நியமிப்பதற்கு 35 பேர் கொண்ட பட்டியலை ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அனுப்பியிருந்தது.

எனினும், இந்தப் பட்டியலில் அரசதரப்புக்குத் தாவிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
மங்களவுக்கு - நிதி
ரவிக்கு - மின்சக்தி எரிபொருள் - வியாபார அபிவிருத்தி
அர்ஜுனவுக்கு - சிவில் விமான சேவைகள்
ராஜிதவுக்கு - சுகாதாரம்
ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல் - நீர்வழங்கல் - உயர்கல்வி
ரிசார்ட் பதியுதீன் - வர்த்தகம் - கைத்தொழில்
சஜித் - வீடமைப்பு
மனோ - தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு
சம்பிக்க - மெகாபொலிஸ் நகர அபிவிருத்தி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அனுப்பிய அமைச்சர் பட்டியலில் சரத் பொன்சேகா- பாலித்த ரங்கே பண்டார- விஜித் விஜிதமுனி சொய்ஸா - லக்ஷ்மன் செனவிரத்ன - பௌஸி - பியசேன கமகே ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி கூறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ஊடக அமைச்சின் கீழ் வரும் அரச ஊடக நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்களை ஜனாதிபதியே நியமனம் செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும், அவர்களும் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top