எந்தக் கட்சியின்
உறுப்பினர் என்பதில்
ஏற்பட்டுள்ள
பாரிய நெருக்கடி
திண்டாடும் மஹிந்த!
காப்பாற்றுவாரா மைத்திரி?
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ எந்தக்
கட்சியின் உறுப்பினர்
என்பதில் ஏற்பட்டுள்ள
நெருக்கடி பாரிய
அளவில் அதிகரித்துள்ளது.
மஹிந்த,
ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனுவில் உறுப்பினர் பதவி பெற்றுள்ளமையினால், அவரால் எதிர்க்கட்சி தலைவராக முடியாதென
ஆளும் கட்சி
உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்துள்ளனர்.
எனினும்
இந்த கருத்தினை
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியினர்
தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றனர். மஹிந்த தற்போது
தமது கட்சியில்
உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை
மஹிந்த ராஜபக்ஸ
இன்னமும் ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சி
உறுப்பினர் என சபாநாயகரிடம் கடிதம் மூலம்
அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் நேற்றைய தினம் கோரிக்கை
விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின்
தலைமையில் இடம்பெற்ற
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது
தொடர்பில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவிடம்
வினவிய போது,
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் அறிவிப்பதாக
கட்சியின் செயலாளர்
சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment