தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!
மைத்திரி அதிரடி
தமிழ்
அரசியல் கைதிகளை
விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ்
அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாயின்,
தடுத்து வைக்கப்பட்டுள்ள
இராணுவத்தினரையும் விடுவிக்கப்பட வேண்டும்
என்று ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
பிரதமர்
ரணில் சத்தியப்பிரமாணம்
செய்த பின்
ஜனாதிபதி மைத்ரி
ஆற்றிய காரசாரமான
உரையின் சாராம்சம்
!
குற்றமிழைத்த
விடுதலைப் புலிகளுக்கு
எதிராக எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில்
பலர் வெளிநாடுகளில்
வாழுகின்றனர்.
நாட்டுக்காக
போராடிய இராணுவத்தினர்
மாத்திரம் ஏன்
குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன்
கொண்டு வந்து
நிறுத்த வேண்டும்?
சிறையில்
உள்ள விடுதலைப்
புலி சந்தேக
நபர்களை விடுவிப்பதாயின்,
குற்றச்சாட்டுகளின் சிறையிலுள்ள இராணுவத்தினரும்
அவ்வாறே விடுவிக்க
வேண்டும்.
இராணுவத்தினரை
விடுவித்தால் மாத்திரமே தமிழ் கைதிகளை விடுவிக்க
அனுமதிப்பேன் .
“ தமிழ்
அரசியல் கைதிகளை
விடுதலை செய்தால்
சிறையில் உள்ள
இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். கடாபிக்கு நடந்தது
எனக்கு நடக்கும்
என சொன்னவர்கள்
ஜே ஆர்
- பிரேமதாச காலத்தில் சொல்லி இருந்தால் அவர்களுக்கு
என்ன நடந்திருக்கும்
என்பதை சொல்ல
வேண்டியதில்லை.
பிரதமராக
யாரை நியமிக்க
வேண்டும் என்பதை
நீதிமன்றமோ பாராளுமன்றமோ தீர்மானிக்க முடியாது. நிறைவேற்று
அதிகாரம் உள்ள
ஜனாதிபதியே அதனை தீர்மானிக்க வேண்டும்.இங்கு
அழுத்தம் வழங்கும்
வெளிநாடுகள் அங்குள்ள பிரபாகரனின் ஆட்களையும் கவனிக்க
வேண்டும்.
புலிகள்
செய்த ஐந்து
தாக்குதல்கள் மற்றும் ஜே வி பி தாக்குதல்களில் இருந்து
நான் தப்பித்தவன்.
நான் அநீதியாக
நடந்தவன் அல்ல.
அதனால் தெய்வ
அனுக்கிரகம் உண்டு.இலங்கை இந்திய ஒப்பந்தம்
கையொப்பமானபோது ஊரடங்கு சட்டம் போட்டு செய்தார்.
அது அவசரகால
சட்டம் அல்ல
. ஊரடங்கு சட்டம்.
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
அன்று ஜனநாயகம் அப்படி
இருந்தது.சட்ட
வல்லுனர்களுடன் ஆராய்ந்த பின்னரே நான்
எல்லா நடவடிக்கைகளையும்
மேற்கொண்டேன்”
நேற்றைய
தினம் ஜனாதிபதி
முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்
பிரமாணம் செய்து
கொண்டார். இந்த
நிகழ்வின் போது
ஐக்கிய தேசிய
கட்சியின் உறுப்பினர்கள்
முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை
வெளியிட்டார்.
ஜனாதிபதியின்
உரை இடம்பெற்றபோது பிரதமரின் முக பாவனை
0 comments:
Post a Comment