ஆபத்திலிருந்து
தப்பி விட்டேன்!
மஹிந்தவின் மகன் யோஷித
ராஜபக்ஸ தெரிவிப்பு
ஆபத்திலிருந்து
தப்பிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்
மகன் யோஷித
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தலையில்
சத்திர சிகிச்சை
மேற்கொண்டதாகவும், தான் ஆபத்தில்
இருப்பதாகவும் ஊடகங்கள் நேற்று வெளியிட்டிருந்த செய்தியில்
உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரகர்
போட்டியின் போது பலத்த காயம் ஏற்பட்ட
நிலையில், யோசித
ராஜபக்ஸ கொழும்பிலுள்ள
தனியார் வைத்தியசாலையில்
தீவிர சிகிச்சை
பெற்றுவருவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த
நிலையில் அதற்கு
டுவிட்டர் மூலம்
யோசித ராஜபக்ஸ
பதிலளித்திருந்தார்
“பொய்யான
செய்திகள் என்பது
எனக்கும் எனது
குடும்பத்திற்கு ஒரு புதிய விடயம் அல்ல.
இந்த செய்தி
உண்மை இல்லை,
நான் ஒரு
சத்திர சிகிச்சை
செய்தேன். ஆனால்
தலையில் பாரிய
காயமும் இல்லை,
தலையில் சத்திரி
சிகிச்சை செய்யவும்
இல்லை. நான்
விரைவில் ரக்பி
விளையாடுவதற்கு திரும்புவேன். செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர்
சம்பவத்திற்கு தொடர்புடைய தரப்பினரிடம் உறுதி செய்ய
வேண்டும்” என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
பிரபல ரக்பி
வீரர் வாசிம்
தாஜுதீன் படுகொலையுடன்
யோசிதவுக்கு நேரடி தொடர்புகள் உள்ளதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளன. அதற்கான தண்டனையாக
யோசிதவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில்
பலரும் கருத்து
வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான
நெருக்கடி நிலையை
சமாளிக்கும் வகையில், தனக்கு எந்தவித பாதிப்பும்
இல்லை என்ற
தோற்றத்தை ஏற்படுத்த
யோசித்த இவ்வாறு
டுவிட்டர் பதிவினை
வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment