எங்கே போனது உங்கள் கலாச்சாரம்
( விஜயா பாஸ்கரன்
)
திருகோணமலை
சண்முகா பாடசாலையில்
ஒரு இஸ்லாமிய
ஆசிரியை அபாயா
ஆடையோடு வந்தார்
என்பதற்காக வீதியில் இறங்கிப் போராடிய கலாச்சாரப்
பற்றாளர்களே இதோ உங்கள் கல்வி அமைச்சர்
எப்படி வருகிறார்
எனபதைப் பாருங்கள்.உங்களால் இவரை
என்ன செய்ய
முடியும்? உங்களது
எதிர்பபை இங்கேயும்
காட்ட முடியுமா?இவரும் வரட்டுத்தனமான
சாதி வெறிபிடித்த
சைவ இந்துப்
பரம்பரைப் பெண்.
இஸ்லாமியர்,கிறிஸ்தவர் என்றால்
பொங்கி எழுவீர்கள்.போராட்டம் நடத்துவீர்கள்.கிண்டலடிப்பீர்கள்.அதிகாரம்,பதவி,உங்களது சமூகம
என்றால் வாயைப்
பொத்துவீர்கள்.பிழைப்புவாத ஊடகங்கங்களே உங்கள் மௌனம்
கலையுமா?
அன்றைக்கு
ஆசிரியைக்களை இடம் மாற்றக் கோரினீர்கள்.இன்றைக்கு
கல்வி அமைச்சரை
மாற்றக் கோருவீரகளா?
முடியுமா? இந்தக்
கல்விஅமைச்சரை பாடசாலையில் இதே கோலத்தில் வந்தாலும்
ஆரத்தி எடுத்து
பொட்டு வைத்து
மாலை போட்டுவரவேற்க
நீங்கள் தயார்.ஆனால் ஒரு
பண்பாட்டு உடையோடு
இஸ்லாமிய ஆசிரியை
வந்தால் எதிரப்பு.
எல்லாமே
வேசம். எல்லாமே
நடிப்பு. எல்லாமே
பிழைப்பு.தமிழ்.இந்து,பண்பாடு
என்அனஉமஅன் பெயரால் நடத்தும் கூத்துக்களை நிறுத்துங்கள்.மனிதரை மனிதராக
மதியுங்கள்
இங்கே
இவர் அணிந்த
ஆடை பிரச்சினை
அல்ல.அவர்
நீச்சல் உடையிலும்
வரலாம்.ஆனால்
ஒரு இந்துக்கள்
படிக்கும் பாடசாலையில்
பெண் ஆசிரியர்
இப்படித்தான் ஆடை அணிந்து வரவேண்டும் என
போராட்டம் நடத்தியவர்கள்
ஒரு கல்வி
அமைச்சர் தமது
கலாச்சாரத்துக்கு ஒவ்வாத ஆடை அணிந்து வருகிறார்.அவரை விமர்சனம்
செய்ய எவருக்குமே
துணிவு வரவில்லை.ஆனால் அடுத்த
மத பெண்களின்
பண்பாட்டு ஆடைகளுக்கு
மட்டும் ஏன்
எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.
குறிப்பாக
திருகோணமலை சண்முகா இந்து பெண்கள் பாடசாலையில்
அபாயாவுக்கு எதிராக போராட்டம் நடாத்தியவர்கள்,ஆதரவளித்தவர்கள்
என்ன பதில்
சொல்லப் போகிறார்கள்.
உண்மையில்
தமிழர்களுக்கு என்று கலாச்சார ஆடைகள், இல்லை.அவை இன்னொரு
சமூகத்திலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை.அதனால்தான் இந்த
ஆடைகளையும் ஏற்கிறார்கள்.அதேநேரம் நடிக்கிறார்கள்
இந்தப்
பதிவு விஜயகலா
பற்றியது அல்ல.
தமிழ் கலாச்சார
காப்பாளர்களைப் பற்றியது
Vijaya
Baskaran
0 comments:
Post a Comment