இராஜிநாமா செய்வதற்கு தயாராக இருக்கும்
புதிய இராஜாங்க அமைச்சர்!
சாய்ந்தமருது
மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை
என்றோ, அவர்களின் கோரிக்கை விதண்டாவாதமானது என்றோ கல்முனை மக்கள்
கூற முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
‘எழுச்சி
பெற்று எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை
முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்
முன்பாக கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை
பொதுக்கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வாறு
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்
மக்களுக்கும் தேசிய இனப் பிரச்சினை
இருக்கின்றதோ அதே போன்று சாய்ந்தமருது
மக்களுக்கு அந்த ஊரின் அடையாளம்,
தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து
கொள்ள வேண்டும்.
1889ஆம் ஆண்டு
கரைவாகு தெற்கு கிராமசபை என்று
ஒரு தனித்துவமான அரசியல் அந்தஸ்தில் சாய்ந்தமருது
மக்கள் இருந்தார்கள்.
துரதிஸ்டவசமாக
1987ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி
பிரேமதாச கொண்டு வந்த சட்டத்தின்
காரணமாக கரைவாகு மேற்கு, கரைவாகு
வடக்கு மற்றும் பட்டினசபை என்பவற்றுடன்
ஒன்றாக இணைக்கப்பட்டது.
இதனால்
அந்த மக்கள் அவர்களுடைய உரிமைகளை
இழந்தார்கள். தலைவர் அஷ்ரப்பின் காலத்தில்
பிரதேச சபை தொடர்பில் பேசக்கூடாது என்று கூறி பிரதேசசெயலகத்தை
வழங்கினார்.
இருந்தபோதிலும்
பின்பு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால்
மீண்டும் பிரதேச சபை கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை நாங்கள்
பேசித் தீர்க்க வேண்டும்.
முஸ்லிம்,
தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாணசபை
சட்ட அடிமை விலங்கை தகர்த்தெறிந்து
பழைய விகிதாசார முறையைக் கொண்டு வரும் முயற்சிக்கு
தடை ஏற்படுகின்றபோது இந்த அமைச்சில் ஒரு
நிமிடம் கூட இருக்காமல் இராஜிநாமா
செய்வேன் இவ்வாறு மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment