கல்முனை மாநகரசபை வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு!
கல்முனை
மாநகரசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற
விசேட அமர்வில்
வரவு செலவுத்திட்டம்
முன்வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் போது
தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு
செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும்
எதிராக 24 வாக்குகளும்
பதிவானது என
சபையில் தெரிவிக்கப்பட்டது.
கல்முனை
மாநகரசபையில் 41 உறுப்பினர்களிருப்பதும், ஆளுந்தரப்பு
ஜக்கிய தேசிய
கட்சியில் இணைந்த
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்களும் உள்ளனர்.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சாய்ந்தமருது சுயேச்சை
(தோடம்பழம்) அணியினர், குதிரை மற்றும்
கொடி உறுப்பினர்கள்
மொத்தம் 24 பேர் எதிராக வாக்களித்தனர்.
0 comments:
Post a Comment