கட்சிக்குள் ஏற்பட்ட அடிதடி!
மைத்திரி எடுத்த அதிரடி முடிவு!!
சிறிலங்கா
சுதந்திர கட்சி
தலைமையகத்தை மீண்டும் அறிவிக்கும் வரை மூடி
வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்
எனச்செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி
தற்போது தனது
குடும்ப உறுப்பினர்களுடன்
தாய்லாந்திற்கு தனிப்பட்ட சுற்றுப் பயணம் ஒன்றில்
ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி அவர்
நாடு திரும்பவுள்ளார்.
சிறிலங்கா
சுதந்திர கட்சிக்குள்
ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே ஜனாதிபதி இந்த
தீரமானத்தை மேற்கொள்ள காரணமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சிறிலங்கா
சுதந்திர கட்சி,
சிறிலங்கா பொதுஜன
பெரமுனவுடன் இணைவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு
சுதந்திர கட்சியின்
தொகுதி அமைப்பாளர்கள்
கடுமையான எதிர்ப்பு
வெளியிட்டமையே ஜனாதிபதியின் கோபத்திற்கு காரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில்
இடம்பெற்ற சிறிலங்கா
சுதந்திர கட்சி
தொகுதி அமைப்பாளர்கள்
கூட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த
கூட்டத்தின் போது உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்
ஏற்பட்டதுடன் அது வன்முறையாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment