இந்தோனேசியாவில் சுனாமிபலி எண்ணிக்கை அதிகரிப்பு;
 ' இறைவனை வேண்டி ஓடினேன்' ': சுற்றுலா பயணி கண்ணீர்






மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா - சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 113 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 113 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்டல்கள், 10 படகுகள் சேதமடைந்தது.

அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரஹோ கூறுகையில், “ தெற்கு சுமத்ரா, ஜாவா மேற்குப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்திப்பகுதியை சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தாக்கின. அலைகள் ஏறக்குறைய 20 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது.

முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கின என்று சந்தேகித்தோம். ஆனால், கிராகட் எரிமலையில் உள்ள சைல்டு எனும் எரிமலை வெடித்தது, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டுள்ளது எனத் தகவல் அறிந்தோம்.

இந்த சுனாமி அலை தாக்கியதால், கரிட்டா கடற்கரைப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் வசித்த மக்களில் பலர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. ஏராளமானோரைக் காணவில்லை, 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் அரசு அலுவலகங்களில்பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சுனாமி அலை தாக்கியதில், மரங்கள் வேரோடு தூக்கி எறியப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள், மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கடற்கரைப்பகுதியில் மீட்புப்பணிகளும், தேடுதல் பணிகளும் நடந்து வருகிறதுஎனத் தெரிவித்தார்.

முஹம்மது பின்டாங் என்ற சுற்றுலாப்பயணி கூறுகையில், “ நாங்கள் குடும்பத்துடன் விடுமுறையைக்கழிக்க 9 மணிக்குத்தான் கரிட்டா பீச்சுக்கு வந்தோம். ஆனால், திடீரென மிக உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்ததால்,நாங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினோம். திடீரென மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அதன்பின் மறைவிடத்துக்குச்சென்று உயிர்தப்பினோம்எனத் தெரிவித்தார்.

லாம்பங் நகரைச் சேர்ந்த  சுற்றலாப்பயணி லுப்தி அல் ரஸ்யித் கூறுகையில்நான் கலியன்டா நகர பாச்சில் இருந்தேன். மிகப்பெரிய அலை வருவதைப் பார்த்து என்னுடைய மொபட்டை ஸ்டார்ட் செய்தேன், அது வேலைசெய்யவில்லை. உடனடியாக இறைவனை வேண்டிக்கொண்டு சாலையில் என்னால் முடிந்த அளவு ஓடத் தொடங்கி உயிர்பிழைத்தேன்எனத் தெரிவித்தார்.

சுனாமி அலைகள் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிக உயரமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top