மீட்டுபார்க்கின்றோம்........!!!
அஷ்ரப் ஞாபகார்த்த மையம்
கல்முனையில் நிறுவப்படும்
ஞாபகார்த்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு



இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லாகத் திகழ்ந்து எங்களை விட்டுப் பிரிந்த மர்ஹும் அஷ்ரப் அவர்கள், எங்களுக்கு விட்டுச்சென்ற அடையாளங்களை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்வதற்காக அன்னார் அரசியல் பணியாற்றிய கல்முனையில் விரைவில் அஷ்ரப் ஞாபகார்த்த மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.


மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகி 17 வருட பூர்த்தியையொட்டி ஞாபகார்த்த நிகழ்வும் கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிராத்தனை வைபவங்களும் கல்முனை மசூறா குழுவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி( 2017-09-16 ) காலை இடம்பெற்றபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



மீட்டுபார்க்கின்றோம்........!!!
கல்முனை கரையோர மாவட்டம்
உள்ளடக்கப்படாவிட்டால்

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமாச் செய்வேன் என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த போது கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் செயலகத்தில் கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி (2016-07-11) திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக்  கூறியிருந்தார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனைக் கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் மூச்சுக்கூட விடுவதாக இல்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் அபிலாஷைகளை குழிதோண்டி புதைக்க முடியாது. அரசாங்கம் நினைத்தால் ஓரிரு நாட்களில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியும். அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் 70 சதவீதமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்தும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படுகின்றனர். இது எமது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். அதனால் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன். பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை.
புதிய உறுதி மொழி
புதிய மாகாண சபை சட்ட அடிமை விலங்கை தகர்தெறிவேன்
இல்லையேல் அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல்
இராஜினாமாச் செய்வேன்.


முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபை சட்ட அடிமை விலங்கை தகர்தெறிந்து பழைய விகிதாசார முறையினை கொண்டுவரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்றபோது இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் இராஜினாமாச் செய்வேன்.
'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக (2018.12.23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பிராந்தியத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சான மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு கல்முனை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பததனைத் தொடர்ந்து இவர் என்ன செய்யப்போகின்றார் என்ற பல்வேறு வாத பிரதிவாதங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்நிலையில் இவ்வமைச்சின் ஊடாக சமூகம் சம்பந்தப்பட்ட இரண்டு சவால்களுக்கு நான் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் தூக்குக் கயிறாக இருக்கின்ற புதிய மாகாண சபைச் சட்டத்தை இரத்துச் செய்வது மற்றும் ஆள்புல ரீதியாக கல்முனை மாநகரத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்பனவாகும்.

புதிய மாகாண சபைச் சட்ட அறிக்கை பாராளுமன்றத்திற்கு வந்தபோது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வீடு சென்று அவருடைய உதவியையும் பெற்று மிகப் பெரிய பிரயத்தனம் மேற்கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடித்தோம். இருந்தபோதிலும் அது இன்னும் சட்ட ரீதியாக ரத்துச் செய்யப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பழைய மாகாண சபை விகிதாசார தேர்தல் சட்டத்தை கொண்டுவர வேண்டிய மிகப் பெரிய தார்மிகப் பொறுப்பில் நான் இருந்துகொண்டிருக்கின்றேன்.

இந்த விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்றரீதியில் முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான இந்த அடிமை விலங்கை தகர்த்தெறிய வேண்டியுள்ளது. அந்தவகையில் பழைய விகிதாசார முறையிலான மாகாணசபை தேர்தல் சடடத்தை மீண்டும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அந்த முயற்சியில் தோல்வியுறும் பட்சத்தில் இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட நான் இருக்காமல் இராஜினாமாச் செய்வேன். இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் மகனுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதில் போர்க்குணம் மிக்க அரசியலைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நாங்களும் செய்துவருகின்றோம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top