பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
31ஆம் திகதிக்கு
முன்னர் இழப்பீடு
கிளிநொச்சியில் ரணிலின் அறிவிப்பால்
உச்ச மகிழ்ச்சியில் தமிழர்கள்
கிளிநொச்சியில்
வெள்ள பாதிப்பினால்
சேதமடைந்த வீடுகளை
திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு
31ஆம் திகதிக்கு
முன்னர் இழப்பீடு
வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க
உறுதியளித்துள்ளார்.
வெள்ள
பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு
இன்று விஜயம்
மேற்கொண்ட பிரதமர்,
வடக்கு அதிகாரிகளுடன்
மாவட்ட செயலகத்தில்
நடைபெற்ற விசேட
கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டார்.
அங்கு
தொடர்ந்து பல
வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர், வெள்ள அனர்த்தத்தினால்
ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை
தொடர்ந்து எதிர்வரும்
மூன்று தினங்களுக்கு
தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு
அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இதேவேளை,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால்
நுளம்பு வலைகள்
வழங்கி வைக்கப்பட்டு
வருகின்ற நிலையில்,
இரண்டு வாரங்களுக்கு
தேவையான உலர்
உணவுப் பொருட்களை
வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கான ஆளணி
பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அதற்கு படையினரை
அழைக்க ஏற்பாடு
செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
மழை,
வெள்ளத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை
கருத்திற் கொண்ட
பிரதமர், நுண்கடன்களை
அறவிடுவதை தாமதப்படுத்த
நடவடிக்கை எடுப்பதாகவும்
கூறியுள்ளார்.
பிரதமருடன்
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக
இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேர்த்தல், கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பொது
நிர்வாக, அனர்த்த
முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,
தொழில் ,தொழிற்சங்க
உறவுகள் மற்றும்
சமூக வலுவூட்டல்
அமைச்சர் தயா
கமகே உள்ளிட்ட
குழுவினரும் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.