நிறைவேற்று அதிகார ஒழிப்பு
நாடாளுமன்றில் இன்று விவாதம்
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின்
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம்
நடத்தப்படவுள்ளது.
ரணில்
விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், இன்று
முதல் முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இன்றைய
அமர்வில்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு
விவகாரங்கள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை,
மஹிந்த ராஜபக்ஸவை
பிரதமர் பதவியில்
இருந்து அகற்றுவதில்
முக்கிய பங்காற்றிய
ஜேவிபி இன்றைய
அமர்வின் போது,
ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு
வரவுள்ளது.
ஜனாதிபதியின்
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக கொண்டு
வரரப்படவுள்ள இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின்
மீது விவாதம்
நடத்தப்படும்.
இந்த
பிரேரணையை தாம்
ஏற்கனவே சமர்ப்பித்து
விட்டதாக ஜேவிபி
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment