மன்னார் கடலில் 1456.1 கிலோ
பீடி இலைகள் மீட்பு
மன்னார்
தெற்கு கடற்கரையோரப் பகுதியில் 1456.1 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர்
கைப்பற்றியுள்ளனர்.
33
பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், இப்பீடி
இலைகள் கடலில் மிதந்து வந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப்
பீடி இலைகளை யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர்
தெரிவித்துள்ளனர்.
மேலும்,
இந்த வருடத்தின் இதுவரையான
காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 8 தடவைகளில் 9 பேர் கைது செய்யப்பட்டதோடு, இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 8,000கிலோ கிராமுக்கும் அதிகளவான பீடி இலைகளை கடற்டையினர் கைப்பற்றியுள்ளதாக
கடற்படையின் ஊடக பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment