அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டில்
 சிக்கும் கோத்தபாய!
லசந்த விக்ரமதுங்கவுக்கு நெருங்கிய
 ஊடக நண்பர்கள் நடவடிக்கை!!



அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லசந்த விக்ரமதுங்கவுக்கு நெருங்கிய ஊடக நண்பர்களே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவை போட்டியிட விடாமல் தடுக்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டால் அது நிறைவடையும் வரையில் குடியுரிமையை இரத்து செய்வதற்கு இடமளிக்கப்படாதென முறைப்பாட்டுத் தரப்பு நம்புகின்றது.

இவ்வாறான நிலையில் கோத்தபாய மீது வழக்கு தொடரப்பட்டால் அவருக்கான அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும். இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

எப்படியிருப்பினும் இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இதுவரையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் தேர்தல் சட்டத்தின்படி இரட்டை குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top