முஸ்லிம் அரசியல்வாதிகளின்
அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உருப்படியாக இல்லை
சாய்ந்தமருது தோணாவில் 212 மில்லியன் ரூபா
ஒதுக்கீடு செய்தும் அபிவிருத்திகள் எதுவும் இல்லை.

 சாய்ந்தமருது தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்ததையடுத்து 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதற்கு முன்னராக தோணா அபிவிருத்தி திட்டத்திற்கு திறைசேரி 30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 11.05.2015 இல்  ஆரம்பிக்கப்பட்டு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு கடந்த 2015 பாராளுமன்ற தேர்தல் காலத்தில் 50 மில்லியன் என்ற தொகைக்கு இந்த தோணா சல்பீனியா அள்ளப்பட்டு சுத்திகரிக்கும் மிகப்பெரிய யாருக்கும் கணக்கு காட்டாத கபளீகரம் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே.
இதன்போது கடற்கரை வீதியோடு இணைந்திருக்கும் தோணாவின் அருகில் உள்ள வீதி கிறவல் மண் போட்டு 150 அல்லது 200 மீட்டர் இந்த மில்லியன் கணக்கு செலவில் செப்பனிடப்பட்டது.
அவ்வாறு பல மில்லியன் செலவில் போடப்பட்ட வீதி மீண்டும் புதிய நிதி ஒதுக்கீட்டில் அகற்றப்பட்டு அவலத்துக்குள்ளான தோணா மீண்டும் அபிவிருத்தி என்ற போர்வைக்குள் ஒரு பகுதி சுத்தப்படுத்தப்பட்டது..
மீண்டும் இந்த தோணா 1மீற்றர் நீளம் ஒன்றுக்கு 125,000.00 ரூபா செலவில் கேபியன் வோல் (Gabion Wall) போடுதல் வேலைத்திட்டம் 29,997,750.00 ரூபாவுக்கு செய்யப்பட்ட்து.
தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை எபெற்றிருந்த போதும் சாய்ந்தமருது தோணா திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப்படவில்லை.
இந்த நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பாக ஒரு விசேட கூட்டம் கடந்த 2015.02.01ம் திகதி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் றவுப் ஹகீம் பிரதேச செயலாளர், பெரிய பள்ளிவாசல்; தலைவர்,மற்றும் புத்திஜீவிகள் என பலரும்கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச் செயற்பட ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது.

1. பொறியியலாளர் எம்.ஐ.ஐ.ஜெஸீல் (தெ.கி.ப.)- தலைவர்
2. கலாநிதி ஏ.எம். றஸ்மி (தெ.கி.ப.)- செயலாளர்
3. .பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் (இ.மி.ச.)-பொருளாளர்
4. டாக்டர்.எம்.ஐ.எம்.ஜெமீல்
5 .ஜனாப். ஐ.எல்.ஏ.மஜீPட் (ஓ.பெ.அதிபர்)
6 .டாக்டர். என். ஆரிப் (மாவட்ட வைத்திய அதிகாரி)
7. கலாநிதி. எம்ஐ.எம். ஹிலால் (தெ.கி.ப.)
8. கலாநிதி. ஏ.ஜஹ்பர் (தெ.கி.ப.)-
9. ஜனாப்.ஏ.எச்.எம்.றியாஸ்

மேற்படி குழு 2015.02.05ம் திகதி கூடி தோணா அபிவிருத்தி வேலைகளை மட்டும் அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது என குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது.

2015.04.05ம் திகதி, குழுவின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் ரவுப் ஹகீம் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் குழுவைச் சந்தித்துரையாடினார். அவ்வேளை SLLRDC யின் நிபுணத்துவக்குழுவொன்றை அனுப்ப அமைச்சர் சம்மதித்தார்.

2015.04.10ம் திகதி SLLRDC யின் தலைவர் சட்டத்தரணி சல்மானின் தலைமையில் ஒரு நிபுணத்துவக் குழு சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து குழுவைச் சந்தித்த பின்னர் தோணாவை முகத்துவாரம் தொடக்கம் காரைதீவு வெட்டாறு வரை முழுமையாகவும் விரிவாகவும் பார்வையிட்டனர்.

நிபுணத்துவக் குழு வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் சமகாலத்தில் தோணாவில் உள்ள கழிவுகளை அகற்றிச் சுத்தப்படுத்தும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவிடம் தெரிவித்தார்.

JAICA வின் வரைபடத்திற்கமைய தோணவின் உயர்ந்த பகுதி (Upper Reach) காரைதீவு பிரதேசத்திலும் நடுப்பகுதி மற்றும் தாழ்ந்த பகுதி (Lower Reach) சாய்ந்தமருது பிரதேசத்திலும் காணப்படுகின்றது. தற்போது நடுப்பகுதியிலும் தாழ்ந்த பகுதியிலுமே அபிவிருத்தி வேலைகள் செயவதற்கு திட்டமிடப்பட்டது.

நடுப்பகுதியில் பாதுகாப்புச் சுவர் கட்டுதலும் தோணா ஓரமாக நடை பாதையுடன் பூங்கா ஏற்படுத்தல் முக்கியமாகக் காணப்படுகின்றது. அதே வேளை தாழ்ந்த பகுதியில் பாதுகாப்பு சுவர்களும் மீன்பிடியாளர்களுக்கான சேவை மற்றும் படகுத்தரிப்பு வசதிகள் முக்கியபடுத்தப்பட்டன.

2015.05.01ம் திகதி SLLRC பணிப்பாளர் மௌலவி ஹனிபா மதனியின் அழைப்பின் பேரில் குழு உறுப்பினர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அமைச்சர் றவுப் ஹகீமை மீண்டும்  சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது அமைச்சர் றவுப் ஹக்கீம்  சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்திற்கு திறைசேரி 30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 11.05.2015 இல் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பொறியியலாளர் ஒருவரின் தலைமையில் இங்கு காரியாலயம் ஒன்று அமையவிருப்பதாகவும் தேவையான இயந்திரங்கள் இங்கு நிறுத்திவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அச்சமயம் குழு உறுப்பினர்கள் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். பாதுகாப்புச்சுவர்கள் கட்டும்போது ஆழமாகவும் உறுதியாகவும் அத்திவாரம் இடல், தோணாவின் உயர்ந்த பகுதிகளிலிருந்து சல்வீனியா மற்றும் கழிவுப் பொருட்கள் நடுப்பகுதிக்கு வராது தடுப்பதற்கான ஏற்பாடுகள்,சில வீடுகளிலிருந்து தோணாவுக்குள் கழிவு நீர் செல்வதைத் தடுக்க மாற்றொழுங்குகள், 03 பாலங்கள் நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பாலங்கள் அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு நிகழ்வில் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்திற்கு 50 மில்லியன் ருபா செலவிடப்ப்ட்டிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
இந்த 50 மில்லியன் ரூபாவை தோணாவில் அவர்களின் விருப்பத்திற்கு செலவிட்ட பின்னர் தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்து மேலும் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.

இவ்வாறு சாய்ந்தமருது தோணாவின் பெயரில் பெரும் தொகைப் பணமாக 212 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் தோணாவில் உருப்படியான வேலைத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சாய்ந்தமருதில் சல்வீனியா வளர்ந்த தோணா அப்படியேதான் காணப்படுகின்றது.   
தோணாவின் இருமருங்கிலும் குடியிருக்கும் மக்கள் நாளாந்தம் பலவிதமான சுவாச நோய்களுக்கும் தொற்றுநோய்களுக்கும் உள்ளாகி வருவதுடன் இரவும் பகலும் நுளம்புக் கடியில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.


தோணாவின் அதிகமான இடங்களில் நீர்க்களைகள் நிலத்துடன் வேரூன்றி மரமாக மாறியுள்ளன. சில இடங்களில் பெரிய புற்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கின்றது.
சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்களும்,பொலிஸாரும் இணைந்து வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் சாதகமான நிலையில் காணப்படும் வகையில் தமது சூழலையும் வீட்டுச் சுற்றாடலையும் வைத்திருப்போருக்கு எச்சரிக்கையும் அதனையும் மீறுவோருக்கு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவும் பிறப்பிக்கின்றனர்.

ஆனால் பொதுமக்களின் வீடுகளில் காண்பதனை விட எத்தனையோ மடங்கு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இளநீர் குரும்பைகள் , பொலித்தீன் பைகள்,  பிளாஸ்டிக் போத்தல்கள், வாளிகள் , உடைந்த சிதைந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள், சிரட்டைகள் என்று எத்தனையோ வகையான பொருட்கள் இங்குள்ள தோணாவில் வீசப்பட்டு காணப்படுகின்றன.

இத்தோணாவில் வளர்ந்து காணப்படும் நீர்க்களையான சல்வீனியா , பிஸ்ரியா மற்றும் ஐக்கோணியா போன்ற தாவரங்களின் இலைகளுக்குள்ளும் நுளம்புக் குடம்பிகள் காணப்படுவது இந்த வீடுகளுக்கு வரும் பொதுசுகாதார பரிசோதகர்களின் கண்களுக்கு புலப்பட ஏன் மறுக்கின்றது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை புத்திஜீவிகளின் கருத்துக்களை அறிந்து திட்டமிட்டு உருப்படியாக செய்ய முடியவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்

இந்த அரசியலிலே

வாக்குறுதி வழங்கும் அரசியலிலே

ஏ.எல்.ஜுனைதீன்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top