கிழக்கில் சில காணிகளை
இம் மாதம் 25ஆம் திகதி
விடுப்பிதற்கு நடவடிக்கை
இலங்கை
இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த
காணிகள் இம்
மாதம் 25ஆம்
திகதி விடுவிப்பதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று
இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது.
குச்சவேலி,
கல்முனை மற்றும்
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி
பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள்
4 ஆவது கட்டமாக
விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவைகளில் 3.5 ஏக்கர்
காணி நிலப்பரப்புகள்
தனியாருக்கு சொந்தமானதாகும். இந்த காணிகள் அம்பாறை
மாவட்ட செயலாளர்,
அனைத்து மதகுரு
தலைவர்கள், ஆளுனர், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு
பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் கிராம
சேவையாளர்களின் முன்னிலையில் கையளிக்கப்படும்.
ஜனாதிபதி
செயலகத்தின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின்
பணிப்புரைக்கமைய இந்த காணிகள் விடுவிப்பதற்கு தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு பாதுகாப்பு
படைத் தளபதி
மேஜர் ஜெனரல்
அநுர ஜயசேகர
அவர்களது தலைமையில்
இக்காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மேலும்
இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment