கவுதமாலாவில் விபத்தைக் காண வந்தவர்கள்மீது
லாரி மோதி 30 பேர் பலி
மக்கள்
நிறைந்த இருண்ட
நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லாரி மோதியதால்
30 பேர் பலியான
சம்பவம் கவுதமாலா
நாட்டில் நேற்றிரவு
நடந்துள்ளது.
இத்துயரச்
சம்பவம் குறித்து
சோலோலா மாகாணத்தைச்
சேர்ந்த நஹுலா
நகராட்சி தீயணைப்புத்துறை
செய்தித் தொடர்பாளர்
செசிலியோ சாக்காஜ்
தெரிவித்ததை மேற்கோள் காட்டி பாக்ஸ்நியூஸ் செய்தி
நிறுவனம் வெளியிட்டுள்ள
விவரம் வருமாறு:
நெடுஞ்சாலை
ஒன்றில் விபத்தொன்றில்
கொல்லப்பட்ட ஒரு நபரைக் காண ஏராளமான
பேர் குழுமியிருந்தனர்.
அப்போது அவ்வழியே
கனரக சரக்கு
லாரி ஒன்று
படுவேகத்துடன் வந்துகொண்டிருந்தது.
நெடுஞ்சாலையில்
எவ்வித விளக்கொளியும்
இல்லாமல் இருட்டாக
இருந்ததால் கட்டுக்கடங்காத வேகத்துடன் வந்த லாரி
எதிர்பாராத விதமாக குழுமியிருந்த மக்கள் மீது
மோதியது.
நகராட்சி அலுவலகம் அருகே இந்த
விபத்து நடந்தது.
லாரியில் சிக்கிய
பலர் உடல்
உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில்
சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு
தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ்
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
கவுதமாலாவின் ஜனாதியதி ஜிம்மி மொரால்ஸ் தனது
டுவிட்டர் பக்கத்தில்,
‘இந்த கோர
சம்பவத்தை நினைத்து
மிகவும் வருந்தினேன்.
இந்த விபத்தில்
30 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு
நாங்கள் தேவையான
உதவிகள் செய்துக்
கொண்டிருக்கிறோம். உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.