பேராசிரியரை கொன்ற மாணவன்

   
பாகிஸ்தானில் கல்லூரி மாணவன் ஒருவன், பிரிவுபசார விழாவின்போது பேராசிரியரை குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் பாகவல்பூர் பகுதியில் அரசு சாதிக் ஈகர்தன் கல்லூரி உள்ளது. இதில் 4000 மாணவிகளும், 2000 மாணவர்களும் பயில்கின்றனர்.

இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிபவர் professor Khalid Hameed  காலீத் ஹமீது ஆவார். இவர் 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி பிரிவுபசார விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளையும் விழாவிற்கு அழைத்துள்ளார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதன்படியே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது வழக்கம். இதற்கு மாறாக மாணவிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தது பெரும் குற்றம் என காதீப் உசைன் எனும் மாணவன் எண்ணியுள்ளான்.

இதையடுத்து விழாவிற்காக அனைத்து மாணவ, மாணவிகளும் கல்லூரியின் திடலில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த காதீப் உசைன், தான் மறைத்து வைத்திருந்த குத்துவாளால் பேராசிரியர் காலித் ஹமீதை குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹமீதை, அங்கிருந்த மாணவர்கள் மீட்டு உடனடியாக  அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காலித் ஹமீது உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கல்லூரிக்கு விரைந்த பொலிஸார் காதீப் உசைனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவனுக்கு எவ்வித பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை எனவும், தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவே இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளான்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top