நாளை களனியில்
உள்ள கோனவல பகுதியில்
769 கிலோகிராம்
கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளன
சுமார்
769 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நாளை களனியில்
உள்ள கோனவல
என்ற இடத்தில்
வைத்து எரியூட்டப்படவுள்ளது.
பல்வேறு
சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகை
நீதிமன்ற சாட்சியங்களுக்காக
இதுவரை பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தன.
இந்த
எரியூட்டல் நிகழ்வுக்கு ஊடகங்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
போதைப்பொருள் தடுப்பு செயலணியின் பணிப்பாளர் சமந்த
கியத்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை
துபாயில் இருந்து
இரண்டு நாட்களுக்கு
முன்னர் நாடு
கடத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரானும் சன்ஜா என்பவரும்
போலி கடவுச்சீட்டுக்களுடனேயே
கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது
அடுத்த ஒரு
மணித்தியாலத்தில் மாலைத்தீவுக்கு புறப்படவிருந்த
விமானத்தில் ஏறும் நோக்குடன் டிக்கட்டுக்களையும் கொள்வனவு செய்து வைத்திருந்ததாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
எனினும்
அந்த முயற்சி
கைக்கூடவில்லை. இம்ரான், 2017 ஆம் ஆண்டு களுத்துறை
சிறைச்சாலை பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு
ஐந்து பாதாள
உலகத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அன்றைய
தினமே மாலையில்
படகு ஒன்றில்
இந்தியாவுக்கு தப்பிச்சென்றார் என்று விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment