நியூசிலாந்து தாக்குதலில்
உயிர்தப்பிய
வங்கதேச கிரிக்கெட் வீரர்
திருமணம்
நியூசிலாந்து
பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட்
வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்தது.
நியூசிலாந்தின்
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் கடந்த 15-ம் திகதி தொழுகை
நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர்
கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த பள்ளிவாசலுக்கு
வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர்.
உள்ளே
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும்,
கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே
அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை
அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர். வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே
வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினாலும்
அவர்களிடையே உள்ள அச்ச உணர்வு நீங்குவதற்கு வெகுநேரம் ஆனது.
இந்த
சம்பவம் காரணமாக, மறுநாள் நியூசிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை
வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. பின்னர் வங்கதேச வீரர்கள் நாடு
திரும்பினர்.
நியூசிலாந்து
தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய கிரிக்கெட்
வீரர்களுள் ஒருவர் மெஹதி ஹசன். இவர் தன் காதலி ரபேயா அக்தர் ப்ரீத்தியை
வங்க தேசத்தில் உள்ள குல்னா பகுதியில் கடந்த வியாழன் அன்று திருமணம் செய்து
கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்,
‘எனது வாழ்க்கையின் புதிய பகுதியை நான் தொடங்குகிறேன்.
என்னை அனைவரும் வாழ்த்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.
இதேபோல்
கிரிக்கெட் வீரர் முஸ்தபீர் ரஹ்மானும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என அவரது
சகோதரர் தெரிவித்துள்ளார். தன்னை தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து திருமணம்
மீட்டெடுக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment