பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 
பணியாற்றும்வைத்தியரொருவரை
இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரொருவர் வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு முரணாகச்  செயற்பட்டு வருவதோடு, அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவ்வைத்தியசாலை பணியாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்மொழிகளிலும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளுடன் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் ஒன்றுகூடிய பணியாளர்கள், குறித்த வைத்தியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,

'பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு குந்தகமாக வைத்தியரொருவர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

மேற்படி வைத்தியசாலையின்; வைத்திய அத்தியட்கரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கே முரணாக குறிந்த வைத்தியர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். இதன் காரணமாக நோயாளர்களுக்கான வைத்திய சேவைகளை, வைத்தியசாலைப் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது காணப்படுகின்றது.

எனவே, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டுவரும் குறித்த வைத்தியரை  இடமாற்றம் செய்யுமாறு கோருகின்றோம்'என்று தெரிவித்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top