க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில்
வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாகாணங்களில்
மன்னார் மாவட்டம் முதலிடம்
திருகோணமலை மாவட்டம் எட்டாம் இடம்



க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தேசிய ரீதியில் முதல் பத்து இடத்திற்குள் எந்த தமிழ் முஸ்லிம் மாணவர்களும் இடம்பெறவில்லை, என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன.

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.

பெறுபேற்று விகிதத்தின் அடிப்படையில்

மன்னார் 69.34%
வவுனியா 68.28%
யாழ்ப்பாணம் 67.02%
அம்பாறை 64.4%
மட்டக்களப்பு 62.51%
முல்லைத்தீவு 60.4%

கிளிநொச்சி 54.3%
திருகோணமலை 53.17%

சதவிகித தேர்ச்சியே பெற்றுக்கொண்டுள்ளனர்.
மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும், மன்னார் 14 ஆவது இடத்திலும் வவனியா 17 ஆவது இடத்திலும் யாழ்ப்பாணம் 18 ஆவது இடத்திலும் அம்பாறை 20  ஆவது இடத்திலும் மட்டக்களப்பு 22 ஆவது இடத்திலும் முல்லைத்தீவு 23 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 23 ஆவது இடத்திலும் கடைசி இடமான 25 ஆவது இடத்தை திருகோணமலை மாவட்டமும், பெற்றுள்ளன.

இதேவேளை, முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம் இடங்களாக மாத்தறை, அம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்கள் 79 சதவிகித, 77 சதவிகித பெறுபேற்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த (2017) ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top