இலங்கையில் நாயுடன்
மல்லுக்கட்டிய குள்ளமனிதன்!
10 அடி தூரம் பாய்ந்து
சென்றதால் பரபரப்பு
சிங்கள ஊடகம் ஒன்று தகவல்
குருணாகலில்
மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்
வெளியிட்டுள்ளது.
கலகெதர
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் குள்ளமனிதர்கள் வந்து சென்றதாக மக்கள்
தெரிவித்துள்ளனர்.
குள்ள
மனிதர்களின் அட்டகாசம் காரணமாக பிரதேச மக்கள் தமது வீடுகளை கைவிட்டுச்
சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவான
மக்கள் வேறு இடங்களிலேயே தங்கியிருப்பதாகவும் இதனால் அவர்களின் தினசரி
நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
இது
தொடர்பில் கருத்து வெளியிட்ட காயம்மா என்ற பெண்,
நேற்று
மாலை ஒரு மணியளவில் நான் பகல் உணவு பெற்றுக் கொள்ள சென்றேன். திடீரென வாசலில்
இருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. நாய் குரைக்கும் திசையை நோக்கி பார்க்கும் போது
இரண்டரை உயரத்தில் மிண்ணும் கண்களுடன் குரங்கு போன்ற மிருகம் ஒன்று நாயுடன்
மல்லுக்கட்டியது.
நான்
கூச்சலிட ஆரம்பித்தவுடன் அந்த மிருகம் அங்கிருந்து ஓடிவிட்டது. நாய் பாரிய
காயமடைந்த நிலையில் காணப்பட்டது. எனினும் குள்ள மனிதனை கணடுபிடிக்க முடியவில்லை என
தெரிவித்துள்ளார்.
இதேவேளை
மற்றுமொரு வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்ற குள்ள மனிதர் கதவை தட்டியுள்ளார். அதனை
அடித்துவிட நினைத்த போது 10அடி தூரம் வரை
பாய்ந்து சென்றுள்ளதாக லஹிரு என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.