வைரலாகும் வங்கதேச கட்டிடத்
தொழிலாளியின் புகைப்படம்
வங்கதேசத்தைச்
சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி
வருகிறது.
இதுகுறித்து
வங்கதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ''மாபெடன்
முங் என்பவர் மார்ச் 21-ம் திகதி தனது
ட்விட்டர் பக்கத்தில் வங்கதேசத்தைச் சேந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரின்
புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். நான்
புகைப்படம் எடுக்கும்போது அந்த நபர் மிகவும் வெட்கப்பட்டார். அவருக்கு எங்கு
பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை.
அவர் கேமராவைப்
பார்த்தபடி ஒரு போட்டோ மட்டுமே எடுக்க முடிந்தது. நான் இறுதியாக அவரைப் புகைப்படம்
எடுத்து விட்டேன். அவர் அழகாக இருக்கிறார் அல்லவா?'' என்று பதிவிட்டார்.
இந்நிலையில்
கட்டிடத் தொழிலாளியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலர்
அந்த நபரின் முகத்தோற்றம் மாடலைப் போல் உள்ளது என்று புகழ்ந்துள்ளனர்.
இந்தப்
புகைப்படம் தற்போதுவரை 24,500 ட்வீட்களையும்
68,700 லைக்குகளையும் தாண்டியுள்ளது.
இதேபோன்று
பார்ப்பதற்கு மாடலைப் போன்று இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்ணும் சமூக வலைதளங்களில் பிரபலம்
அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment