கொழும்பு பொது நூலகம் டிஜிட்டல் மயம்

டிஜிட்டல் நூலக திட்டத்தின் கீழ் Digital Libraries Project  பொதுமக்கள் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICTA) நிலையமும் தேசிய நூலகம் மற்றும் ஆவணசேவை சபையும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதன் கீழ் கொழும்பு பொது நூலகத்தின் மூலம் வாசகர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பல டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக அனைத்து அங்கத்தவர்களுக்கும் கணனி மயப்படுத்தப்பட்ட நூலக அங்கத்தவர் இலக்கம் ஒன்று வழங்கப்படும்.

இந்த டிஜிட்டல் மய நடவடிக்கை காரணமாக நூல்களை தெரிவு செய்வதற்கான காலம் குறைவடையும். இதேபோன்று இணையத்தளத்தின் ஊடாக பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும் கிட்டுவதுடன் உலகின் பிரபல சஞ்சிகைகள் உள்ளிட்டவற்றையும் இணையத்தளத்தின் ஊடாக பார்வை இடமுடியும். அபூர்வ தகவல் அடங்கிய அச்சு ஆவணம் மற்றும் நூல்களின் பிரதிகளையும் பார்வையிட முடியும்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top