கல்முனை, கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின்
நீர் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத
நீருக்குப் பொறுப்பான அமைச்சரும்
கல்முனையின் காவலன் என மார்பு தட்டும்
இராஜாங்க அமைச்சரும்!

கல்முனை, கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் தடைப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கிறீன் பீல்ட் தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ரூபா 714,358/13 சதத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காசோலையை உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற நிகழ்வு கிறீன் பீல்ட் குடியிருப்பு முகாமைத்துவ காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம் அப்துல் ரஸ்ஸாக்(ஜவாத்), கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம். மனாப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் மான்குட்டி என்று அழைக்கப்படும் எம். ஜுனைதீன், ஆகியோர் இதன் போது கலந்து கொண்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் குறித்த மக்களில் எவ்வித கரிசனையும் செலுத்தவில்லை எனவும், அவரது அமைச்சின் கீழ் உள்ள நீர் வழங்கல் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், கல்முனையின் காவலன் என மார்பு தட்டும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கூட கரிசனை செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அனைவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்குஉரிய வேளையில் உதவிய  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதீயுதீனுக்குகல்முனை கிறீன் பீல்ட் தற்காலிக முகாமைத்துவ குழு செயலாளர் அஹமட் புர்க்கான் நன்றிகளை தெரிவித்தார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top