கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர்
வசமிருந்த
காணிகள் இன்று விடுவிப்பு
யுத்த காலங்களிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த
காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் இன்று
காலை 11.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இராணுவ பாதுகாப்பு நோக்கத்துக்காக
பயன்படுத்தப்பட்டு வந்த 5.5 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி திரியாயில்
3 ஏக்கர் காணியும், அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவனையில் 0.5 காணியும், திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர்
காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின்
செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ தளபதிகள் என பலர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment