26.03.2019 அன்று இடம்பெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
 மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



இலங்கை நிலக்கண்ணிவெடிகள் அற்ற நாடாக பிரகடனப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குதல் (சிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் பெறுபேறாக நபர்கள் அழிவு நிலக்கண்ணி வெடி மற்றும் யுத்த தளத்தில் எஞ்சியிருந்து வெடிக்கும் பொருட்களினால் பாதிக்கப்பட்ட 3000 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான முக்கிய உதவி மற்றும் வைத்திய சிகிச்சையை வழங்குவதற்கு மேலதிகமாக நிலக்கண்ணி வெடிளை தடுத்தல் தொடர்பிலான ஒட்டாவா இணக்கப்பாட்டின் பங்குதார் என்ற ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது. 1302சதுரகிலோமீற்றர் அளவில் நிலக்கண்ணிவெடி பரந்து காணப்பட்டதினால் அனர்த்தத்திற்குள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் 25 கிலோமீற்றர் தவிந்த ஏனைய பகுதி பரிசோதிக்கப்பட்டு நிலக்கண்ணிவெடி அற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு இலங்;கையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டது. இதற்கமைவாக 2020ஆம் ஆண்டளவில் இலங்கை நிலக்கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்துவதற்கு மேலும் நிலக்கண்ணி வெடி இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் அவற்றினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதற்காக சிலக்கண்ணிவெடி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக கௌரவ பிரதமரும் தேசியக்கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்துதல் வடமாகாண அபிவிருத்தி புனர்வாழ்வு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு இலக்கம் 12இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தை பயனுள்ள வகையில் மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 18ஆவத விடயம்)
இலங்கைக்குள் பயனுள்ள வெளிநாட்டு நாணய முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டை மேலும் வலுவூட்டுதல் மற்றும் அது தொடர்பான ஒழுங்கு பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான விதிகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்காக ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டு இல 12இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தை புதுப்பித்து திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹிங்குராகொட தேசிய தொழிற்பயிற்சி மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவருத்திக்கு பயனுள்ள தொழிலுக்கான சந்தர்ப்பத்தை இலக்காகக் கொண்டு தரமான தொழில் கல்வி மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர் சமூகத்திற்கு பயிற்சிகளை இளைஞர் சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதன் தேவையை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இதற்கமைவாக பொலன்னறுவை ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இங்குராகொட தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையமொன்றை 35மிலலியன் யூரோ நெதர்லாந்தின் நிவாரண நிதியத்தின் கீழ் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 9.7 மில்லியன் யூரோ நிதியுதவி உள்ளடக்கிய நிவாரண கடன் நிதியின் கீழ் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெதர்லாந்தின் கோப்பிரடிவ் ராவோ வங்கி உடன் கடன் உடன்பாட்டை எட்டுவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நுவரெலிய உயர் High Altitude Stadium விளையாட்டு கட்டடிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு நிதியுதவியை பெற்றுக் கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
High Altitude பயிற்சி வீரர்களின் செயற்;பாட்டை மேம்படுத்துவதற்கு ர்iபா யுடவவைரனந  காரணமாவதுடன் அதனை அந்த வீரர்களினால் தாங்கி கொள்ளும் சக்தி உடல்ரீதியிலான சக்தியை மேம்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் வெற்றிகரமான ஆற்றல்களை வெளிபடுத்தி வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் அதிகரிப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது, High Altitude Stadium விளையாட்டு பயிற்சி மத்திய நியைமொன்றை கடல் மட்டத்திலிருந்து 1500இற்றும் 3000இற்கும் இடைப்பட்ட மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். தற்பொழுது ஆசியாவில் உயரத்தில்  ஆகக்கூடுதலான இவ்வாறான மலை மத்திய நிலையமொன்றை 1899 மீற்றர் உயரத்தைக் கொண்டதாக சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் இயற்iகாக அமைப்பதற்கு பயன்படுத்தி நுவரெலியா பிரதேசத்தில் 1895 மீற்றர் உயரத்தைக் கொண்ட நிலப்பரப்பு என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இதில் பயிற்சி கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்படடுள்ளது. இவற்றுக்கு தேவையான நிதியின் மூலம் ஏற்றுமதி கடன் வசதியின் கீழ் பிரிட்டனின் ஏற்றுமதி நிதி நிறுவனத்தினால் தேவையான நிதியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றுமதி கடன் வசதியின் மூலம் உள்ளடங்காத திட்ட பெறுமதி நிதி மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு மக்கள் வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக இந்த வங்கியுடன் கலந்துரையாடல் இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்காக  நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

200 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்கு நிதியை பெற்றுக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
நாட்டின் முக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளில் முழுமையான பயனை பின்தங்கிய கிராமங்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நாட்டுக்கள் போக்குவரத்துத் தொடர்புகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. பின்தங்கிய பிரதேசம் அபிவிருத்தி கண்ட பிரதேசம் மற்றும் ஆகியவற்றுடன் தொடர்பை மேற்கொள்ளும் நோக்கத்துடனான நடைமுறையான கிராமியப் பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கிராமியப் பாலங்களுக்குள் 200 பாலங்களை  நெதர்லாந்து நிவாரண நிதியத்தில்  நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 14யூரோ மில்லியன் நன்கொடையை உள்ளடக்கிய நிவாரணக் கடன் நிதியின் கீழ் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நெதர்லாந்தின் கோப்பிரடிவ் ராவோ வங்கி யுஏ உடன் கடன் உடன்பாட்டை எட்டுவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
தரமான மற்றும் பயிற்சியைக் கொண்ட சுகாதார தொழிற்துறையினரை உருவாக்குவதன் மூலம் உயர் தரத்தைக் கொண்ட சுகாதார வசதியை நாட்டுக்;குள் வியாபித்தல் உயர்தர பரீட்சையில் தகுதிகளை பூர்த்தி செய்த ஆற்றல் மிகுந்த மாணவர்களை தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் நோக்குடன்  70.46 மில்லியன அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் 3 கட்டங்களின் கீழ் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரண நிதியாகவும் எஞ்சிய 26.46 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக சப்ரகமுவ வைத்திய பீடத்தை ஸ்தாபிக்கும் திட்டத்தின் முக்கிய பீட கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கும் உகரணங்களை கொள்வனவு செய்தல் உள்ளடக்கிய 2ஆவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 50மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணக் கடன் தொகையும் அபிவிருத்திக்கான சவுதி நிதி மூலம் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

நுகர்வோருக்கும் தேசிய உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்காக விசேட வர்த்தக பொருட்கள் வரியை விதிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு (நிழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)
2007ஆம் ஆண்டு இல 48 இன் கீழான விசேட பொருட்கள் வரி சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்காக இந்த சட்டத்தின் 7ஆவது  சரத்தின் கட்டளைகளுக்கு அமைய கூடிய வரையில் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக நுகர்வோருக்கும் தேசிய உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி விதிக்கப்பட்டமைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட 2019.01.03 திகதி அன்று இலக்கம் 210430 2019 .02.01 திகதி இல 210865 2019.02.07 திகதி அன்று இல 2104/30 2019.02.01 திகதி அன்று 2108/65 2019.02.07 திகதி அன்று 210915 2019.02.8 திகதி அன்று இல 210920 2019.02.24 திகதி அன்று இல2109/15 மற்றும் 2019.03.02 திகதி அன்று இலக்கம் 2019/20  கீழான வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பித்ததற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை முழுமையான சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மாடிக்கட்டிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவத விடயம்)
1979ஆம் ஆண்டில் 65 மாணவர்களைக் கொண்ட 1ஆவது குழவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் தற்பொழுது 937 மாணவர்கள் கல்வி கற்கும் பீடமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரையில் பல்லின மக்கள் கட்டமைப்பைக் கொண்ட வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அபிவிருத்தி கண்டிருந்த போதிலும் அதற்கு அமைவாக அவர்களுக்கு வசதிகளை செய்யும் வகையில் விரிவுரை மண்டபம் விஞ்ஞான பீடம் வகுப்பறை இருப்பிட வசதி முதலான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்றிருக்கவில்லை. இலங்கையின் ஞானம் நிதியத்தின் ஊடாக 740மில்லியன் ரூபா முதலீட்டுன் நவீன வசதிகளுடன் 6500 சதுர கிரோமீற்றரும் துணை கட்டிடத்தொகுதி ஒன்று நிர்மாணித்து யாழப்;பாண பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு பிரிட்டனின் லைக்கா கூட்டுறவு வர்த்தகம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள சுவாச நோய் தொடர்பான தேசிய வைத்தியசாலையை pவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)
1946ஆம் ஆண்டில் சேவையை வழங்குதலை முன்னெடுத்த வலிசறையில் அமைந்துள்ள சுவாச நோய் தொடர்பான தேசிய வைத்தியசாலை இலங்கையில் சுவாச நோய் வரையறையை மேற்கொள்ளும் மற்றும் சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒரேயொரு வைத்தியசாலையாக செயல்படுகின்றது. வருடாந்தம் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு  சேவையை வழங்கும் இந்த வைத்தியசாலை வருடாந்தம் 1000 மார்பு. சத்திரசிகிக்சை மேற்கொள்கின்றது. சுவாச வைத்தயசாலைகளில் நோயாளர்களுக்கு தற்பொழுது மற்றும் எதிர்கால கோரிக்கையை பூர்த்தி செய்து இந்த வைத்தியசாலையில் சுகாதார வசதிகளை மேம்படுத்தவதற்காக 9, 180மில்லியன் ரூபா முதலீட்டுடன் அபிவிருத்தித் திட்டமொன்று கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சமர்;ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாரம்பரிய வைத்திய அறிவு பாதுகாப்பு திட்டம் 2 (நிகழ்ச்சி நிரலில் 36ஆவது விடயம்)
தொற்றா நோயைப் போன்று ஏனைய நோய் சிகிச்சை தடுப்பதற்காக எமது பாரம்பரிய வைத்திய முறை பெரும்பாலானவை உதவியுள்ளமைக்கு சாட்சி பகிர்கின்றது. இதனால்  பாரம்பரிய வைத்தியத்தை பாதுகாத்தல் மற்றும் பிரபல்யபடுத்தும் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு அருகிவரும் பாரம்பரிய வைத்திய முறை மற்றும் வைத்திய அறிவை பாதுகாப்பதற்கான திட்டமொன்று ஆயர்வேத திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதன் முதல் நடவடிக்கையின் கீழ் சுமார் 2500 வைத்தியர்களின் தகவல்களைத் திரட்டி தரவுக் கட்டமைப்பொன்றை வகுப்பதற்கும் பழமை வாய்ந்த நூல் நிலையம் ஓரை புத்தகங்களை பாதுகாக்கும் ஆவணத்தை நவீனமயப்படுத்துதல் நூல் 400 ஐப் பாதுகாத்தல் மற்றும் துணை ஆவணமிடுதல் பாரம்பரிய வைத்திய அறிவை பாதுகாப்பதற்காக சட்டவிதிகள் தயாரித்தல் மற்றும் டிஜிட்டல் நூல் நிலையத்திற்குத் தேவையான மென்பொருள் ஸ்தாபித்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் 2ஆம் கட்டமாக மறுசீரமைப்பு நிவாரண நடைமுறை மற்றும் பாதுகாத்தல் பாரம்பரிய வைத்திய முறை ஆய்வுக்குட்படுத்தி விஞ்ஞான ரீதியில் உறுதி செய்தல் இந்த வைத்திய முறையில் எதிர்கால பரம்பரையினர் முன்னெடுக்கும் நோக்கத்தை நிறைவேற்றவதற்காக 350 மில்லினயன் ரூபா முதலீட்டுன் இடைக்கால வரவு செலவுத்திட்ட கட்டமைப்பக்குள் இந்த 2ஆம் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சமர்;ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11 தீங்கு விளைவிக்கும் மற்றும் மைக்ரோ. வாழ்வு தொடர்பில்  செயல்படுவதற்குத் தேவையான நோயை உறுதி செய்வதற்கான . வசதியைக் கொண்ட இரசாயன கூடமொன்றை நிர்மாணித்தல்  (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)

பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நோயை உறுதிசெய்தல் முதலானவை  116 வருட வரலாற்றைக் கொண்ட வைத்திய ஆய்வு கூடத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் சேவையை மேலும் விரிவுபடுத்தி தீங்கு மற்றும் ஆபத்தான மைக்ரோவினால்  ஏற்படும் மற்றும் பரவுவதை  அணுக்களில் அறிந்துகொள்வதற்கும் அது தொடர்பில் பாதுகாப்புடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உயர்தரத்திலான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 3ஆவது மட்டத்திலான இரசாயன கூடமொன்றை 125 மில்லியன் ரூபா முதலீட்டுடன் ஸ்தாபிப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சமர்;ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்ககுhரம் வழங்கியுள்ளது.

12.மின்சார தொழிற்துறை தொடர்பிலான பொதுக்கொள்கை வழிகாட்டிகளை வெளியிடுதல். (நிகழ்ச்சி நிரலில் 40ஆவது விடயம்)

2009ஆம் ஆண்டு இல. 20 கீழான இலங்கை மின்சார சட்டத்தில் 5ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய மின்சார தொழிற்துறை தொடர்பிலான பொது கொள்கை வழிகாட்டியை வெளியிடுவது அமைச்சரினால் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படும். 2009ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டியை இரத்து செய்து எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் எரிபொருள் ஒழுங்கு நிலை மற்றும் பாதுகாப்புத் தன்மை மின்சார கட்டணம் மின் உற்பத்தி ஒளி ஒளிப்பீடு (transmission) மற்றும் விநியோக கட்டமைப்பு மின்சார திட்ட மூலதனம் எரிசக்தி பாதுகாப்பு நுகர்வோர் சேவை பல்லின மற்றும் பல்லின பிரிவு அபிவிருத்தி பாதுகாப்பு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டியை வெளியிடுவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13.தற்பொழுது நிலவும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக மின்சாரத்தை சிக்கனமாக பாவித்தல் (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)

தற்பொழுது இடம்பெறும் வறட்சி உடனான காலநிலையின் காரணமாக நாட்டில் மின்சாரத்திற்கான கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சவால்கள் நிலவுகின்றன. மின்சார உற்பத்தி வழமை நிலைக்கு வரும்வரையில் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவது மூலம் குறிப்பிடத்தக்களவு மின்சாரத்தை சேமிப்பதற்கு உள்ள ஆற்றலை கவனத்தில் கொண்டு வீடு மற்றும் வர்த்தக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்தும் பொழுது சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு தேவையான நடைமுறை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தெளிவுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் அனைத்து வீடுகளிலும் 2 மின்குமிழ்கள் ஒளிருவதை நிறுத்துதல் அரச நிறுவனம் மத மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்பாவனையில் 10 சதவீதத்தை குறைத்தல் தேவையற்ற வீதி மின்குமிழ்கள் ஒளிர்வதை நிறுத்துதல் பொதுவான தினங்களில் வீதி மின்குமிழ்கள் ஒளிர்வதை நிறுத்தும் நேரத்தில் ஒரு மணித்தியாலம் அளவில் மின்குமிழ்கள் ஒளிர்வதை நிருத்துதல் முதலான செயற்பாடுகள் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14.நீதிமன்றத்தில் தண்ட பணம் மற்றும் காணிகளை வழங்குதல் அடிப்படையில் அறவிடப்படும் முத்திரை கட்டணம் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய வகையிலான முறையை முன்னெடுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 42ஆவது விடயம்)

உள்ளுராட்சி மன்ற எல்லை பிரதேச நீதிமன்ற தண்ட பணம் மற்றும் காணிகளை வழங்குவதற்காக எழுதப்பட்டு உறுதிசெய்யப்படும். உறுதி அடிப்படையில் அறவிடப்படும் முத்திரை கட்டணங்கள் மூலமாக திரட்டப்படும் வருமானம் அதன் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக தற்பொழுது உள்ள நடைமுறையை மேலும் செயல்திறனாக்கும் நோக்கில் 1987ஆம் ஆண்டு இல 42 இன் கீழான மாகாண சபை சட்டத்தின் 19ஆவது சரத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும். அதனை தொடர்ந்து திருத்த சட்டமூலம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் யாப்பின் 154 ஆவது சரத்துக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மூலம் மாகாண சபையிடம் சமரப்;பித்து திருத்தங்கள் ஏதாவது இருக்குமாயின் அவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்படும் திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி சபை மன்ற அமைச்சர் வஜீர அபேவர்த்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15.இரத்தினபுரி நானவல தொல நீர்  வளத்தின் மூலம் பயன் பெறும் பிரதேசத்தை பாதுகாத்தல் (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)

இரத்தினபுரி நானவல தொல  நீர் வளத்தின் மூலம் சுமார் 89 ஏக்கர் வயல் காணிக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது அத்தோடு அதனை அடுத்து செயல்படும் குடி நீர் திட்டத்தின் மூலம் 140 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்கமைவாக இந்த நீர் வளத்துக்கு உட்பட்ட நீரினால் பயன்பெறும் பிரதேசத்தை பாதுகாத்து முன்னெடுப்பதன் முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் உள்ள இந்த பிரதேசத்தை விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் கையளிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16.ராஜகிரிய செரமோனியல் ட்ரைவு பிரதேசத்தில் நடுத்தர வருமானத்தை கொண்ட தொழிற்துறையினருக்கான வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ளுதல். (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)

அரச மற்றும் தனியார் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளோர் உள்ளடங்களாக நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களினால் சமாளிக்கக்கூடிய தொகைக்கு வீட்டு அலகை 5 லட்ச ரூபாவிற்கு வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ராஜகிரிய செரமோனியல் ட்ரைவு பிரதேசத்தில் மத்தியதர வருமானத்தை பெரும் பணியாளர்களுக்காக 177வீட்டு அலகுகளும் ஏனைய வசதிகளையும் கொண்ட வீடமைப்பு திட்டம் ஒன்று அரச தனியார் பங்களிப்பு அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17.பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்குமிடையில் கரும்பு தொடர்பான பொருட்களை பரிமாறுவது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 54ஆவது விடயம்)

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் கரும்பு தொடர்பான மூலப்பொருட்களை பரிமாறுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு மூலம் அடையக்கூடிய பயன்களை கவனத்தில் கொண்டு இலங்கையின் கரும்பு ஆய்வு நிறுவனம் பாகிஸ்தானின் பைசல்லாபாத்தில் உள்ள கரும்பு ஆய்வு அபிவிருத்தி சபை மற்றும் அதன் கரும்பு ஆய்வு நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவின் திஸ்ஸாநாயக்க சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18.முக்கிய வீதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 57ஆவது விடயம்)

அடிப்படை வசதி அபிவிருத்தி திட்டத்திற்காக நிதியை வழங்கும் பொருட்டு இலங்கை மற்றும் சீனா அபிவிருத்தி வங்கிக்கிடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய வீதி திட்டத்தின் கீழ் 16.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிர்மான பணிகளுக்காக பயன்படுத்தி முக்கியத்துவம் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மேலதிக வீதி புணரமைப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19.கண்டிகேட்டவெ நீதிமன்ற கட்டடத்தொகுதியை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)

11 நீதிமன்றங்களை கொண்ட கண்டி கேட்டவெ நீதிமன்ற கட்டடத்தொகுதி 303.5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுதாபனத்தின் மூலம் மேம்படுத்துவதற்காக நீதிமன்ற சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சர் திருமதி தலத்தா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20.மோதலின் காரணமாக தாக்கத்திற்கு உள்ளான நபர்களின் சொத்து தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நிவாரண காலத்தை வழங்குவதற்காக பரிந்துரைக்கப்படும் (விஷேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தை மீள அமுல்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)

கடந்த காலப்பகுதியில் நிலவிய மோதலின் காரணமாக காணி உள்ளிட்ட பிரத்தியேக சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தின் மூலம் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாமல்போன நபர்களுக்கு உடனடி ஒழுங்குகளை செய்யும் நோக்கில் 2016ஆம் ஆண்டு இல 5இன் கீழான நிவாரண காலம் (விஷேட ஒழுங்கு விதிகள் ) சட்டத்தை வலுவுள்ளதாக்கப்படவுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பயனடையாத நிலமைக்குள்ளான நபர்கள் கால எல்லை கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாளில் இருந்து 2 வருட காலத்துக்குள் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வதற்கு பயன்பெறாத நிலைக்கு உள்ளான நபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. வழக்கை தாக்கல் செய்வதற்காக மோதல் நிலவிய காலப்பகுதியில் காணாமல் போன ஆவணங்களை மீள தயாரிப்பதற்கு அல்லது காணிகளின் உரிமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை திரட்டுவதற்கும் இந்த சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தை மேலும் 3 வருடங்களுக்கு நீடிப்பதற்காக கால அவகாசம் (விஷேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தை மீள அமுல்ப்படுத்துவதற்காக சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக்  நீதிமன்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலத்தா அத்துகோரள சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21.அரசாங்க பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)

தரம் 13 உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் 2ஆம் கல்வி ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் விடயத்துக்கான தேசிய தொழில் ஆற்றல் (Nஏஞ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை பெறவேண்டியுள்ளது. இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளமை மற்றும் சில பயிற்சி நிறுவனம் ஒரு இடத்தில் மாத்திரம் அமைந்திருப்பதன் காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக தொகையை செலவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22.1982ஆம் ஆண்டு இல 33இன் கீழான வகுப் சட்டம் காலவதியாகுவதை மீள நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 71ஆவது விடயம்)

நாடு முழுவதும் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வணக்கஸ்தல பொறுப்பு நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினை மற்றும் தகராறுகளை தீர்ப்பதற்கு தேவையான உடனடி வழிகாட்டல்களை தயாரித்தல் மற்றும் வக்ப் சபை மற்றும் வக்ப் நீதிமன்ற சபை ஆகிய நிறுவனங்கள் செயற்பாடுகளுக்காக தற்போதைய வக்ப் சட்டத்துக்கு கால அவகாசம் தேவையை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் கவனத்தில் கொள்வதற்காக புத்திஜீவிகள் குழு ஒன்றை நியமிப்பதற்கும் அதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கும் தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்..அலிம் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23.பொரலந்த நீச்சல் தடாகத்தை நிர்மானித்தல் (நிகழ்ச்சி நிரலில் 72ஆவது விடயம்)

வெலிமடை பொரலந்த பிரதேசத்தில் அமைந்துள்ள நகரத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பொரலந்த பொலிஸ் பயிற்சி கல்லூரி உள்ள காணியில் 6 நிரல்களை கொண்ட 25 மீற்றர் நீளத்துடனான நீச்சல் தடாகம் ஒற்றை நிர்மாணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் வாழும் வீர வீராங்கனைகளுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் அரச சேவை ஊழியர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாடசாலை சாரணர்களுக்கும் உயிர் பாதுகாப்பு நீச்சல் ஆலோசகர்கள் பொலிஸ் மற்றும் ஏனைய சேவைகளில் இணைந்துள்ள அதிகாரிகளுக்கும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் எதிர்பார்ப்புடன் இந்த நீச்சல் தடாகம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் 50 மில்லியன் ரூபா நிதியில் இதற்கான திட்டத்தை மேற்கொள்வதற்காக தொலைதொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24.சர்வதேச சுதந்திர வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான வர்த்தக சீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)

சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச போட்டிகளின் மூலம் இலங்கை பொருளாதாரத்துக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய பலன்களை அதிகரிப்பதற்காக இந்த துறைக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வர்த்தக சீரமைப்பு வேலைதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வேலைத்திட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் கைத்தொழிலுக்கான வர்த்தக சீரமைப்புக்கான சிபாரிசுக்களை மேற்கொள்வதற்கு சுயாதீன நிறுவனமாக வர்த்தகம் மற்றும் பயன்மிக்க ஆணைக்குழு ஒன்றிணைந்த நடவடிக்கை குழு மற்றும் வர்த்தகம் மற்றும் பயனுள்ள ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான மலிக் சமரவிக்ரம இணைந்து சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்துக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2 கட்டிடத்தொகுதியின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிர்மான பணிகளை முன்னெடுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 80ஆவது விடயம்)
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்துக்காக உத்தேச கட்டிடத்தொகுதியின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெருகை குழுவின் சிபாரிசின் அடிப்படையில் 356.3 மில்லியன் ரூபாவை பொறியியல் சேவை தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்காக நகர திட்டமிடல் நீர்வளங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மையாங்கனை வவுனியா எம்பிலிபிட்டிய 3 கிரீட் உபநிலையங்களுக்கான முதலீட்டாளர்களுடன் உடன்படிக்கையை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 82ஆவது விடயம்)
சூரிய மின்உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய வலைப்பின்னலுடன் தொடர்புப்படுத்தப்படும் 90 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான துணை கிரீட் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக மையாங்கனை எம்பிலிபிட்டிய மற்றும் வவுனியா கிரீட் உப நிலையங்களுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தளம் நிலக்கரி அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 83ஆவது விடயம்)
புத்தளம் நிலக்கரி அனல் மின்நிலையத்துக்கு விரைவாக தேவையான நிலக்கரி உடனடியாக கொள்வனவு செய்தல் (spot tender) கீழ் கொள்வனவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக அனல் மின்நிலையத்துக்கு தேவையான 300 000 மெற்றிக்தொன் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியல் பெறுகைகுழுவின் சிபாரிசுக்கமைய ஒரு மெற்றிக்தொன் 81.87 அமெரிக்க டொலர்கள் வீதம் M/S Adani Global Pte Ltd என்ற நிறுவனத்துடன் கொள்வனவு செய்வதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊவா மாகாணத்தில் பத்தலயாய பெலகன்வேவ மற்றும் கிராந்துரு கோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர் வழங்குவதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 85ஆவது விடயம்)
மாகாண மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் பத்தலயாய பெலகன்வேவ பிரதேசத்துக்கான நீர் விநியோகத்தை விஸ்தரிப்புக்கான ஒப்பந்தம் மற்றும் கிராந்துரு கோட்டை நீர் சுத்திகரிப்பு மேம்படுத்துதல் நீர் கோபுரத்தை நிர்மாணித்தல் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் (CACP) சிபாரிசுக்கமைய Squire Mech Engineering (Pvt) Limited என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆழமான கடலில் மணலை அள்ளுதலுக்கான றெஜர் இயந்திரம் ஒன்றை (TSHD) கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 86ஆவது விடயம்)
நிர்மாண பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கங்கை மணலுக்கு தட்டுபாடு காரணமாக அதற்கு மாற்று மூலப்பொருள் என்ற ரீதியில் தயாரிக்கப்படும் கடல் மணலுக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுதாபனத்தினால் நிர்மாண பணிக்காக பயன்படுத்தக்கூடிய வகையில் கடல் மணலை தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் தற்பொழுது நிர்மாண தொழிற்துறையில் மொத்த மணல் தேவையில் 10 சதவீதம் விநியோகிக்கப்படுகிறது. நிர்மாணத் தொழிற்துறையின் அபிவிருத்தியுடன் எதிர்காலத்தில் மணலுக்காக உள்ள கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஆழமான கடலில் மணலை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் றெஜர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பெரும் நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30.2019ஆம் ஆண்டு மே மாதத்துக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 87ஆவது விடயம்)

2019ஆம் ஆண்டில் மே மாதத்துக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனங்களுக்கான இரசாயன தேவையை பூர்த்தி செய்வதற்காக 8000 மெற்றிக்தொன் யூரியாவை 1 மெற்றிக்தொன் 302.54 அமெரிக்க டொலர்கள் வீதமும் மயூடிஎட் ஒப் பொட்டேஸ் 8000 மெற்றிக்தொன்னை ஒரு மெற்றிக்தொன் 343.74 அமெரிக்க டொலர்கள் வீதமும் மற்றும் மயூ;டிஎட் ஒப் பொட்டேஸ் (சிகப்பு ரோஸ்) 2000 மெற்றிக்தொன்னை ஒரு மெற்றிக்தொன் 343.74 அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட வெலன்சி இன்டர்நெசனல் ட்ரெடிங் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை வள அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெறிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

31.இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 93ஆவது விடயம்)

பொது போக்குவரத்து வசதிகளை விரிவுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கு மிகவும் தரமான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட சொப்ட் லோஜிக் ஒடோ மொபைல் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32.இலங்கை ரயில்வே போக்குவரத்து சேவைக்காக 75 ரயில் பயணிகள் பெட்டிகள் மற்றும்  பயணிகளுக்கான 20 படுக்கை வசதிகளை கொண்ட (Flat bed) கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 94ஆவது விடயம்)

தற்பொழுது இலங்கை ரயில்வே சேவையில் தற்போதைய தொழில்நுட்பத்துக்கு பொருத்தமான வகையில் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனூடாக பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தோனேசியா ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் நிதி உதவியின் கீழ் மலையக ரயில் சேவைக்காக 50 அடி நீளமான 75 பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் மற்றும் 20 (குடயவ டிநன) இலங்கை ரயில் சேவைக்காக கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் இந்தோனேசியா அரசாங்கத்துக்கு உட்பட்ட PT Industri  Kerete Api (PT INKA)ரயில் நிறுவனத்துக்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

33.தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுப்பனவை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 99ஆவது விடயம்)

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த கொடுப்பனவு 750 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு ஊழிய தொழிற்சங்கம் மற்றும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படுத்திகொள்ளப்பட்டுள்ளது. இதில் சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என பெருந்தோட்டத்துறையின் சிரமமான நிலை ஏற்பட்டிருப்பதுடன் இது தொடர்பாக முன்வந்துள்ள பிரதிநிதிகளை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்காக நிவாரணம் வழங்கும் வகையில் பிரதேச நிறுவன தோட்ட சேவையாளர்களுக்காக தற்பொழுது உடன்பட்டுள்ள நாளாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக மேலும் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top