ஒன்றாக இணைந்து கேக்
வெட்டும் ரவூப் ஹக்கீம்
மற்றும் மஹிந்த ராஜபக்ஸ
அடுத்த ஆட்சியில் இணைவதற்கான முஸ்திபா?
பாகிஸ்தான்
நாட்டின் 79 ஆவது சுகந்திர தின விழா கொழும்பு ஹலடாரி ஹோட்டலில் நேற்று
இடம்பெற்றுள்ளது.
இதன்போது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர
திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும்
எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டியுள்ளனர்.
இதேவேளை
முஸ்லிம் காங்கிரஸின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான செயித் அலிசாஹிர் மெளலானாவும் எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கைகுழுக்கி சிரித்து மகிழ்ச்சியை தங்களுக்குள் வெளிபடுத்தியுள்ளனர். இது அடுத்த
ஆட்சியில் மஹிந்தவுடன் இணைவதற்கான
முஸ்திபா என கேள்வி எழுப்ப்ப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த
போது, பாகிஸ்தானுடன்
நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார்.
அண்மைக்காலமாக
பாகிஸ்தானுக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான நட்பு
இன்னும் வலுப்பெற்று
வருவது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த
ராஜபக்ஸவுடன், அவரது ஆதரவு தலைவர்களான வாசுதேவ
நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், போன்றவர்களும்,
நிமால் சிறிபால
டி சில்வா,
அதுரலியே ரத்தன
தேரரும் நிகழ்வில்
காணப்பட்டனர்.
எனினும்,
அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
உள்ளிட்ட ஒரு
சிலரே இந்த
நிகழ்வில் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment