சுழற்சி முறையில் நாளாந்தம் மின்வெட்டு!
ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சாரம் தடைப்படாது.
நாளாந்தம்
சுழற்சி முறையில்
நாடுபூராகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக
மின்சார சபை
அறிவித்துள்ளது. நாளாந்தம் காலை மற்றும் மாலை
வேளைகளில் சில
மணித்தியாலங்களுக்கு மின்சார தடையை
அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார
சபை தெரிவித்துள்ளது.
நீரேந்து
பகுதிகளில் தற்போது நிலவும் வரட்சி காரணமாகவும்,
நாளாந்தம் மின்
தேவை அதிகரித்து
வருவதன் காரணமாகவும்
கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க
முடியாதிருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில்
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேர விபரங்கள் வருமாறு;
- காலையில்
8.30am - 11.30am (அல்லது)
11.30am - 2.30pm (அல்லது)
2.30pm - 5.30pm
- இரவில்
(1 மணித்தியாலம்)
6.30pm - 7.30pm (அல்லது)
7.30pm - 8.30pm
சனிக்கிழமைகளில் 2 ¼ மணித்தியாலங்கள்
8.30am - 10.45am (அல்லது)
10.45am - 1.00pm (அல்லது)
1.00 pm - 3.15pm (அல்லது)
3.15pm -5.30 pm
ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சாரம் தடைப்படாது.
0 comments:
Post a Comment