சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர்
உடல்நிலை கவலைக்கிடம்
ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
84
வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று
உடல்நலம் விசாரித்தார்.
தமிழ்
பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில்
இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது.
அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை.
அதைத்
தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில்
உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அங்கு சிகிச்சை
பெற்று வந்தார்.
நேற்று
காலை அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் ஆனது. தகவல் அறிந்ததும் டைரக்டர் பாரதிராஜா, கவிஞர்
வைரமுத்து ஆகியோர் நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு சென்று கே.பாலச்சந்தரை பார்த்தார்கள்.
டாக்டர்கள்
தீவிர சிகிச்சை அளித்தபின் கே.பாலச்சந்தரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கே.பாலச்சந்தரின்
உடல்நிலை பற்றி அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை
ஒரு அறிக்கையை வெளியிட்டது.
0 comments:
Post a Comment